சூலு சுல்தானகம்
சூலு சுல்தானகம் (Sultanate of Sulu Dar al-Islam[1] என்பது சூலு கடல், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதித் தீவுகள், போர்னியோவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இசுலாமிய தவுசூக் மக்களின் இறைமையுள்ள நாடு ஆகும். இச்சுல்தானகம் 1457 ஆம் ஆண்டில்[2] ஜொகூரில் பிறந்த அரபு நாடுகாண் பயணியும், இசுலாமியக் கல்விமானுமான சய்யிது அபூபக்கர் அபிரின் (சூலுவின் சரிப் உல்-அசீம்) என்பவரால் உருவாக்கப்பட்டது. அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.
سلطنة سولو دار الإسلام சூலு தார் அல்-இசுலாம் அரசு சுல்தானகம் Royal Sultanate of Sulu Dar al-Islam | |||||
| |||||
| |||||
தலைநகரம் | ஜோலோ, சூலு | ||||
மொழி(கள்) | அரபு மொழி (அதிகாரபூர்வம்), தவுசூக், மலாயு, பங்கூங்கி, பசாவு மொழிகள் | ||||
சமயம் | இசுலாம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
சுல்தான் | |||||
- | 1457–1480 | சரீப் உல்-அசீம் | |||
- | 1480-1505 | கமலுத்-தின் | |||
- | 1505-1527 | அமிருல்-உமாரா | |||
- | 1884–1899 | ஜமா உல்-கிராம் I | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | 1457 | |||
- | சுல்தானகம் கலைப்பு | 1917 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() | ||||
இந்த சுல்தானகம் தற்போது எந்த நாட்டாலும் இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், சூலு சுல்தான் அல்லது வடக்கு போர்னியோவின் சுல்தான் எனப் பலர் உரிமை கோரி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டில், மூன்றாம் ஜமாலுல் கிராம் சுல்தான் எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் தலைமையில் சில பிலிப்பீன்சு குழு ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாத் டத்துவுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசப் படுத்தியுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
- சூலு அரசு சுல்தானகம் அல்லது சூலு தருல் இசுலாம் சுல்தானகம் எனவும் சில வேளைகளில் அழைக்கப்படுகிறது.
- Usman, Edd (10 February 2010). "Heirs of Sulu Sultanate urged to attend general convention". http://www.mb.com.ph/articles/242781/heirs-sulu-sultanate-urged-attend-general-convention. பார்த்த நாள்: 21 December 2010.
- [[n:மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர்|மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர்]], விக்கிசெய்தி, மார்ச் 3, 2013