பொந்தியானா சுல்தானகம்

பொந்தியானா சுல்தானகம் எனப்படுவது தற்கால இந்தோனேசியாவின் பொந்தியானாவில் காணப்பட்ட முடியாட்சி நாடாகும்.

பொந்தியானா சுல்தானகம்
Kesultanan Pontianak
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியின் பகுதி (1779 முதல்)
1771–1950
கொடி சின்னம்
தலைநகரம் பொந்தியானா
மொழி(கள்) மலாயு மொழி
சமயம் ஷாபிஈ சுன்னி இசுலாம்
அரசாங்கம் இசுலாமிய முடியாட்சி
வரலாறு
 - நிறுவல் ஒற்றோபர் 23 1771
 - முடிசூடல் 1778 செப்டெம்பர் 1 ஆம் திகதி
 - நெதர்லாந்திடமிருந்து இந்தோனேசியாவாக சுதந்திரம் பெறல் ஓகத்து 17 1950
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
குத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)

வரலாறு

பொந்தியானா சுல்தானகம் இமாம் அலீ அர்-ரிளா அவர்களின் வழித்தோன்றலாகிய சையிது ஷரீப் அப்துர் ரஹ்மான் அல்-காதிரி என்பவர் நாடு காண் பயணியாக ஹளரமௌத்திலிருந்து புறப்பட்டு இவ்விடத்தை அடைந்த பின்னர் அவரால் 1771 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் பெனம்பாகான் மெம்பாவா அரசரின் மகளையும் பஞ்சார் சுல்தானின் மகளையும் மணந்ததன் மூலம் கலிமந்தானில் இரு முறை அரசியல் திருமணங்களைச் செய்தார்.

அவர்கள் பொந்தியானாவை அடைந்து காதிரிய்யா அரண்மனையைக் கட்டுவித்தனர். பின்னர் 1779 ஆம் ஆண்டு அவர் ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியினால் பொந்தியானா சுல்தானாக அங்கீகரிக்கப்பட்டார்.[1]

பொந்தியானா சுல்தானகம் இலன்பாங் குடியரசுடன் நட்புறவு பாராட்டியது.

பொந்தியானாவின் சுல்தான் ஷரீப் முகம்மது அல்-காதிரீ கலிமந்தானிலிருந்த ஏனைய மலாய சுல்தான்கள் அனைவருடனும் சேர்த்து பொந்தியானா நிகழ்வின் போது யப்பானியரால் கொல்லப்பட்டார். அவரது மகன்மாரிருவரும் கூட யப்பானியரால் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

பொந்தியானாவின் சுல்தான்கள்[2]

சுல்தான் of பொந்தியானா
முன்னாள் மன்னராட்சி
அரசு சின்னம்
இரண்டாம் ஹமீது
(வலது)
முதல் மன்னர் ஷரீபு அப்துர் ரஹ்மான் அல்-காதிரி
கடைசி மன்னர் சரீபு ஹமீது அல்-காதிரி
அலுவல் வசிப்பிடம் காதிரிய்யா அரண்மனை
Appointer தந்தை வழி
மன்னராட்சி துவங்கியது 1771 ஒற்றோபர் 23
மன்னராட்சி முடிவுற்றது 1950 ஓகத்து 17
சுல்தான் ஆட்சி
1 ஷரீப் அப்துர் ரஹ்மான் அல்-காதிரி 1771-1808
2 ஷரீப் காசிம் அல்-காதிரி 1808-1819
3 ஷரீப் உஸ்மான் அல்-காதிரி 1819-1855
4 ஷரீப் ஹமீது அல்-காதிரி 1855-1872
5 ஷரீப் யூசுப் அல்-காதிரி 1872-1895
6 ஷரீப் முகம்மது அல்-காதிரி 1895-1944
7 ஷரீப் ஹமீது அல்-காதிரி 1945-1950

உசாத்துணை

  1. (id) http://ahmadiftahsidik.page.tl/Menengok-Sisa-Kejayaan-Keraton-Kadriah.htm?PHPSESSID=baaa75b3e0216e11602533722f474e82
  2. (id) http://melayuonline.com/history/?a=bU5WL29QTS9VenVwRnRCb20%3D%3D&lang=Indonesia

மேலதிக வாசிப்புக்கு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.