சூறாவளி குஸ்டாவ்

சூறாவளி குஸ்டாவ் (Hurricane Gustav) என்பது 2008 ஆம் ஆண்டுக்கான அத்திலாந்திக் சூறாவளி பருவத்தின் இரண்டாவது பெரும் சூறாவளி ஆகும். இது 2008, ஆகஸ்ட் 25 காலையில் எயிட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் இருந்து 420 கிமீ தென்கிழக்கே தோன்றியது. அதே நாள் பிற்பகலில் இது வெப்ப வலயப் புயலாக மாற்றமடைந்து ஆகஸ்ட் 26 அதிகாலையில் சூறாவளியாகியது. அதே நாளில் இது எயிட்டியின் ஜாக்மெல் என்ற இடத்தில் தரை தட்டியது. இது பின்னர் 24 மணி நேரத்தினுள் வெப்பவலயப் புயலில் இருந்து 4ம் கட்டப் புயலாக தீவிரமாகியது[1] ஆகஸ்ட் 31 வரையில் மொத்தம் 85 பேர் இதன் தாக்கத்தால் கரிபியனில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3]. தற்போது இது 3ம் கட்டப் புயலாக தேசிய புயல் மையம் அறிவித்துள்ளது. இது லூசியானாவின் கரையைத் தாக்கும் போது 4ம் கட்டப் புயலாக மாறும் அபாயம் உள்ளது[4].

சூறாவளி குஸ்டாவ்
Category 4 major hurricane (SSHWS/NWS)
மேற்கு கூபாவில் தரை தொடும்பொழுது குஸ்டாவ்
தொடக்கம்ஆகஸ்ட் 25, 2008
மறைவுசெப்டம்பர் 4, 2008
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 150 mph (240 கிமீ/ம)
தாழ் அமுக்கம்941 பார் (hPa); 27.79 inHg
இறப்புகள்120
சேதம்$20 பில்லியன் (2008 US$)
(estimated)
பாதிப்புப் பகுதிகள்டொமினிக்கக் குடியரசு, எய்ட்டி, ஜமேக்கா, கேமன் தீவுகள், கூபா, புளோரிடா, லூசியானா, மிசிசிப்பி, அலபாமா
2008 அத்திலாந்திக் சூறாவளி பருவம்-இன் ஒரு பகுதி

2008, ஆகஸ்ட் 30, இரவு 11:00 மணிக்கு குஸ்டாவ் சூறாவளி கியூபாவின் ஹவானாவில் இருந்து மேற்கே 145 கிமீ (15 கடல்மைல் 23.1°N 83.8°W, தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இது ஆகஸ்ட் 30ஆம் தேதி சூறாவளி குஸ்டாவ் அமெரிக்காவின் வளைகுடா கரையோரப் பகுதிக்கு அணுகுகிறது என்று தெரியவந்தது. இதே நாள் நியூ ஓர்லென்ஸ் நகரின் தலைவர் ரே நேகின் நியூ ஓர்லென்ஸ் மக்களுக்கு கட்டாய வெளியேற்றம் ஒழுங்கை வெளியிட்டுள்ளார்[5]. நியூ ஓர்லென்ஸ் நகரிலேயே 2005இல் சூறாவளி கத்ரீனா மோசமான விளைவுகளை தந்தது. லூசியானா ஆளுனர் பாபி ஜிண்டல் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31, இரவு 7:00 மணியளவில் மிசிசிப்பி ஆற்றின் வாயிலில் இருந்து 15 கடல் மைல் தூரத்தில் (26.9°வ 87.7°மே, 280 கிமீ) தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது நியூ ஓர்லென்சில் இருந்து 415 கிமீ தூரத்தில் உள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி லூசியானா மாநிலத்தில் 2ம் கட்ட புயலாக தரை தட்டியது. தற்போது 1ம் கட்டத்துக்கு குறைந்துள்ளது. ஆனாலும் நியூ ஓர்லென்ஸ், பாடன் ரூஜ் மற்றும் லூசியானாவிலும் மிசிசிப்பியிலும் அலபாமாவிலும் பல்வேறு நகரங்களில் வெள்ளங்களும் டொர்னேடோகளும் ஏற்பட்டன. தெற்கு லூசியானாவில் 700,000 வீடுகளுக்கு மின் சேவை இழந்தது[6].

செப்டம்பர் 3 மதிப்பீட்டின் படி 120 பேர் குஸ்டாவ் காரணமாக உயிரிழந்தனர். $20 பில்லியன் அளவுக்கு சேதப் படுத்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.