சூரிய குலம்

சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இச்வாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்பெறுகிறது.

இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் அறியப்பெறுகின்றனர். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு.

ரகு வம்சம்

சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

பகிரத தவம்

வம்ச பட்டியல்

  • சூரியன்
  • வைவஷ்த மனு
  • இச்வாகு
  • விகுட்சன்
  • புரஞ்சயன்
  • அனநேசு
  • பிருது
  • சாவஷ்தி
  • குவலயாசுவன்
  • யுவனாசுவன்
  • மாந்தாதா
  • அம்பரீஷன்
  • புருகுச்சன்
  • திரிசங்கு - புருகுச்சன் பேரன்
  • அரிச்சந்திரன் - திரிசங்கின் மகன்
  • ரோஹிதன்
  • பாகுகன் -ரோஹிதன் பரம்பரை
  • சகரன்
  • அசமஞ்சன்
  • அம்சுமான்
  • பகீரதன்
  • அஸ்தமகன்
  • மூலகன்
  • கட்வாங்கன்
  • தீர்கபாகு
  • ரகு - தசரதனின் தாத்தா
  • அஜன் -தசரதனின் தந்தை
  • தசரதன்
  • இராமர்
  • லவன்
  • குசன்
  • அதிதி நிஷதன் நபன் புண்டரீகன் ஷேமதர்மா
  • இரணியநாபன்
  • புஷ்யன்
  • பிரகதபாலன்

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.[1] ஆனால் கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்ய வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன.

காண்க

கருவி நூல்

ஆதாரம்

  1. பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.