சுக்மா

சுக்மா (Sukma) இந்திய நாட்டின் சத்தீசுகர் மாநிலத்திலுள்ள சுக்மா சுக்மா மாவட்டத்தின் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்..

சுக்மா
Sukma

सुकमा
நகரம்
சுக்மா
Sukma
சுக்மா
Sukma
ஆள்கூறுகள்: 18°24′0″N 81°40′0″E
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்சுக்மா மாவட்டம்
ஏற்றம்210
மக்கள்தொகை
  மொத்தம்13
மொழிகள்
  அதிகாரப்புர்வ மொழிகள்இந்தி மொழி, சத்தீசுகர் மொழி
  பிற மொழிகள்கோயா மொழி, கோண்டி மொழி, தெலுங்கு மொழி, சோரா மொழி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு07864-284001
வாகனப் பதிவுCG
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரம்செகல்தல்பூர்
இணையதளம்http://sukma.gov.in

புவியியல்

கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 210 மீட்டர் உயரத்தில் 18°24′0″ வடக்கு 81°40′0″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சுக்மா நகரம் அமைந்துள்ளது[1].

இருப்பிடம்

தேசிய நெடுஞ்சாலை எண் 30 இந்நகரத்தை சத்தீசுகரின் செகல்தர்பூர் மாநகராட்சியுடன் இணைக்கிறது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளைக் கொண்ட சுக்மா நகராட்சி 3,104 வீடுகளையும், 13,926 மக்கள்தொகையும் கொண்டது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 74.20% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்து சமயம்|இந்துக்கள்]] 83.32%, இசுலாமியர்கள் 9.40%, கிறித்தவர்கள் 4.55%, சீக்கியர்கள் 0.17%, பௌத்தர்கள் 1.28% மற்றும் பிறர் 0.04% உள்ளனர். சுக்மா மக்கள் கோயா மொழி, கோண்டி மொழி, தெலுங்கு மொழி, சோரா மொழிகள் பேசுகின்றனர். [2]

போக்குவரத்து

சுக்மா நகரத்தில் சாலை வழிப் போக்குவரத்து திட்டம் மட்டுமே போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ராய்ப்பூர், சத்தீசுகர், ஐதராபாத்து (இந்தியா), பிலாய், பிலாசுப்பூர் (சத்தீசுகர்), விசயவாடா, செகதல்பூர், விசாகப்பட்டினம் முதலான நகரங்களுக்கு சுக்மா நகரத்திலிருந்து பொது மக்கள் பேருந்துகள் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர்.

தாண்டேவாடா நகரத்திலுள்ள உள்ள இரயில் நிலையம் மிக அருகிலுள்ள இரயில் நிலையமாகும். இதேபோல செகதல்பூரில் உள்ள விமான நிலையம் சுக்மா நகரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.

பிற செய்திகள்

சிவப்பு தாழ்வாரம் பகுதியில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்-மாவோயிச கிளர்ச்சியால் அடிக்கடி பாதிக்கப்படும் ஒரு பகுதியாகும். காவல் துறை பணியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து மாவோயிசுட்டுகளால் இந்தப்பகுதி தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இராணுவம், சி.ஆர்.பி.எஃப் மற்றும் காவல்துறை ஊழியர்கள் மீது இதுவரை ஏராளமான தாக்குதல்கள் இந்நகரத்தில் நடந்துள்ளன. 2013 சுக்மா தாக்குதல் மற்றும் 2017 சுக்மா தாக்குதல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்ததேயாகும்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.