ஜெகதல்பூர்

ஜெகதல்பூர் (Jagdalpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் கோட்டத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியுமாகும். இதன் அருகில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம், ஜெகதல்பூரிலிருந்து 307 கிமீ தொலைவில் உள்ளது.

ஜெகதல்பூர்
जगदलपुर
மாநகராட்சி
அடைபெயர்(கள்): தெருக்களின் நகரம்
ஜெகதல்பூர்
ஜெகதல்பூர்
ஆள்கூறுகள்: 19.07°N 82.03°E / 19.07; 82.03
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பஸ்தர் மாவட்டம்
அரசு
  வகைமாநகராட்சி
  Bodyஜெகதல்பூர் நகராட்சி
பரப்பளவு
  மொத்தம்29
பரப்பளவு தரவரிசை4th
ஏற்றம்552
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1,25,463
  தரவரிசை4வது இடம்
  அடர்த்தி4
மொழிகள்
  அலுவல் மொழிகள்இந்தி
  வட்டார மொழிகள்ஹல்பி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்494001 & 494002
தொலைபேசி குறியீட்டென்07782-xxxxxx
வாகனப் பதிவுCG-17
இணையதளம்http://nagarnigamjagdalpur.in/AboutJagdalpur.htm

ஜெகதல்பூர் நகரம் துணி வணிகத்தில் ஒரு பெரிய முனையாகும். எனவே இந்நகரத்தை சின்ன இந்தூர் என அழைப்பர். பஸ்தர் கோட்டத்தில் மட்டுமல்லாமல், ஒரிசா மற்றும் தென்னிந்தியாவின் பெரிய துணி சந்தையாக ஜெகதல்பூர் விளங்குகிறது.

சுற்றுலா

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுற்றுலாத் தலைநகராக ஜெகதல்பூர் விளங்குகிறது. ஜெகதல்பூர் பசுமையான இயற்கை காடுகள் சூழ்ந்த மலை அருவிகள், குகைகள், இயற்கைப் பூங்காக்கள், இயற்கை ஆதாரங்கள், மூலிகைச் செடி கொடிகள், உணர்ச்சி பொங்கும் திருவிழாக்கள் கொண்ட நகரமாகும். மேலும் இந்நகரத்தின் அருகில் கங்கேர் கட்டி தேசியப் பூங்கா, கோட்டும்சர் குகை, கைலாச குகைகள் சுற்றுலா பயணிகளை கவரதக்க வகையில் உள்ளது.[1]

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48 வார்டுகள் கொண்ட ஜெகதல்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,25,463 ஆகும். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 14,185 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.91% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 81.80 %, இசுலாமியர்கள் 5.32%, கிறித்தவர்கள் 9.44%, சீக்கியர்கள் 1.27%, சமணர்கள் 1.81%, பௌத்தர்கள் 0.21% மற்றவர்கள் 0.15% ஆகவுள்ளனர். [2]

தொழில்

ஜெகதல்பூர் நகரத்திலிருந்து 16 கி மீ தொலைவில் நிறுவப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள நகர்னார் இரும்பு ஆலை திசம்பர் 2016 முதல் செயல்பட உள்ளது. [3] ஜெகதல்பூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் 19,500 கோடி மதிப்பிலான டாடா நிறுவனத்தின் இரும்பாலை ஆண்டுக்கு 5.5 மில்லியன் டன் இரும்பு தளவாட உற்பத்தி செய்கிறது.[4]

போக்குவரத்து

சாலைகள்

ஜெகதல்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் மற்றும் அருகில் உள்ள ஒரிசா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களின் நகரங்களுக்கும் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளது.

தொடருந்து

புவனேஸ்வர் - ஜெகதல்பூர் செல்லும் ஹிராகண்ட் விரைவு தொடருந்து வண்டியின் (BBS-Jagdalpur) வழித்தடம்

ஜகதல்பூர் தொடருந்து நிலையம், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க் நகரங்களையும், ஒரிசாவின் புவனேஸ்வர், கட்டக், கோராபுட் நகரங்களையும், ஆந்திராவின், விஜயநகரம், விசாகப்பட்டினம் நகரங்களையும், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரத்தை இணைக்கும் ஒற்றை இருப்புப்பாதை கொண்டுள்ளது.[5][6]

திருவிழாக்கள்

ஜெகதல்பூர் நகரத்தில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் நவராத்திரி, இரத யாத்திரை, மகாசிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, மாங்கனித் திருவிழாவும் அடங்கும்.[7]

தட்ப வெப்பம்

மார்ச் முதல் மே மாதம் வரை கடும் கோடைகாலமும்; சூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலமும்; நவம்பர் முதல் பிப்ரவரி முடிய குளிர்காலமும் கொண்டது ஜெகதல்பூர் நகரம்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெகதல்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.9
(91.2)
35.9
(96.6)
39.6
(103.3)
42.5
(108.5)
44.8
(112.6)
42.6
(108.7)
35.9
(96.6)
33.4
(92.1)
34.0
(93.2)
33.9
(93)
33.0
(91.4)
31.5
(88.7)
44.8
(112.6)
உயர் சராசரி °C (°F) 28.3
(82.9)
31.2
(88.2)
35.1
(95.2)
37.6
(99.7)
38.1
(100.6)
33.4
(92.1)
28.9
(84)
28.4
(83.1)
29.8
(85.6)
30.0
(86)
28.5
(83.3)
27.6
(81.7)
31.41
(88.54)
தினசரி சராசரி °C (°F) 19.9
(67.8)
23.0
(73.4)
26.9
(80.4)
30.0
(86)
31.2
(88.2)
28.5
(83.3)
25.7
(78.3)
25.4
(77.7)
25.9
(78.6)
24.7
(76.5)
21.7
(71.1)
19.5
(67.1)
25.2
(77.36)
தாழ் சராசரி °C (°F) 11.5
(52.7)
14.7
(58.5)
18.6
(65.5)
22.3
(72.1)
24.3
(75.7)
23.6
(74.5)
22.4
(72.3)
22.3
(72.1)
21.9
(71.4)
19.4
(66.9)
14.8
(58.6)
11.3
(52.3)
18.93
(66.07)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.8
(37)
7.0
(44.6)
8.3
(46.9)
14.8
(58.6)
17.0
(62.6)
14.3
(57.7)
18.3
(64.9)
19.3
(66.7)
17.4
(63.3)
11.0
(51.8)
5.9
(42.6)
4.4
(39.9)
2.8
(37)
மழைப்பொழிவுmm (inches) 7
(0.28)
11
(0.43)
12
(0.47)
44
(1.73)
90
(3.54)
295
(11.61)
352
(13.86)
367
(14.45)
200
(7.87)
87
(3.43)
26
(1.02)
4
(0.16)
1,495
(58.86)
% ஈரப்பதம் 59 51 42 43 47 69 84 86 82 74 68 65 64.2
சராசரி மழை நாட்கள் 0.8 1.5 1.6 4.5 6.8 13.8 20.5 21.1 15.4 6.8 2.2 0.6 95.6
ஆதாரம்: NOAA (1971-1990)[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.