சு. சண்முகசுந்தரம்

காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காவ்யா சண்முகசுந்தரம்
பிறப்புசு. சண்முகசுந்தரம்
டிசம்பர் 30, 1949
கால்கரை,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்காவ்யா சண்முகசுந்தரம்
கல்விதமிழில் முனைவர் பட்டம்
அறியப்படுவதுஎழுத்தாளர்,
பதிப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்வெ.சுடலைமுத்துத் தேவர்,
இசக்கியம்மாள்
வாழ்க்கைத்
துணை
முத்துலெட்சுமி
பிள்ளைகள்முத்துக்குமார் (மகன்)
காவ்யா (மகள்)
உறவினர்கள்சகோதர,சகோதரிகள் -7
வலைத்தளம்
www.kaavyaa.com

கல்வி

இவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தமிழ்ப் பணி

  • பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
  • செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 - 2011 ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.

எழுத்துப் பணி

பதிப்பு பணி

இவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.