காவ்யா பதிப்பகம்

காவ்யா பதிப்பகம் என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனமாகும். 1981 ஆம் ஆண்டில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் முனைவர் சு. சண்முகசுந்தரம் என்பவர் தனது மகள் காவ்யாவின் முதல் பிறந்த நாளன்று “காவ்யா பதிப்பகத்தைத் தொடங்கினார். “நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்” என்கிற எண்ணத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம், ஆய்வுகள், விமர்சனங்கள் என இதுவரை 700 க்கும் மேற்பட்ட நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் இலக்கியத் தடங்கள், வட்டாரச் சிறுகதைகள், தொகுப்புகள், அறிஞர்களின் கட்டுரைக் களஞ்சியம், நாட்டுப்புறவியல், தெய்வங்கள் தொகுப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பரிசு மற்றும் விருதுகள்

காவ்யா பதிப்பகத்தின் நூல்கள் இதுவரை 25 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது.

சாகித்ய அகாதமி பரிசு

  1. க.நா.சு.வின் 'இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்' என்ற நூல் 1986 ஆம் ஆண்டில் தில்லி சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றது.

தமிழ்நாடு அரசு பரிசு

காவ்யா பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் பரிசு பெற்ற நூல்களின் அட்டவணை இது.

வ.எண்ஆண்டுவகைப்பாடுநூலின் பெயர்நூலாசிரியர்
12006சமயம், ஆன்மீகம், அளவையியல்மார்க்சியம் பெரியாரியம்ஞானி
22007மரபுக்கவிதைதிருத்தொண்டர் காப்பியம்சூ.இன்னாசி
32009நாட்டுப்புறவியல்நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரைசு. சண்முக சுந்தரம்
42010திறனாய்வுநாயன்மார் கதைகள் - பெரிய புராணமும் ஹரிஹரன ரகளைகளும்அ. சங்கரி
52010புதுக்கவிதைகுறுந்தொகை பதிப்பு வரலாறு (1915-2010)இரா.தாமோதரன் (அறவேந்தன்)
  • இந்த அட்டவணை முழுமை பெறவில்லை. (விவரம் அறிந்தவர்கள் இணைக்கலாம்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.