ஸ்ரீகாந்த் (நடிகர்)

ஸ்ரீகாந்த் (ஆங்கிலம்:Srikanth, பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.

ஸ்ரீகாந்த்
பிறப்புஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி
பெப்ரவரி 28, 1979 (1979-02-28)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002 – இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
வந்தனா ஸ்ரீகாந்த்

திரைவாழ்வு

ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2002ரோஜாக்கூட்டம்இளங்கோதமிழ்சிறந்த புது நடிகருக்கான விருது
2002ஏப்ரல் மாதத்தில்கதிர்தமிழ்
2003மனசெல்லாம்பாலாதமிழ்
2003பார்த்திபன் கனவுபார்த்திபன்தமிழ்தமிழ்நாடு திரைப்பட விருது
2003ஜூட்ஈஸ்வரன்தமிழ்
2003Okariki Okaruகாமேஸ்வர ராவ்தெலுங்குதமிழில் உன்னை பார்த்த நாள் முதல்
2004போஸ்போஸ்தமிழ்
2004வர்ணஜாலம்சக்திவேலதமிழ்
2005கனா கண்டேன்பாஸ்கர்தமிழ்
2005ஒரு நாள் ஒரு கனவுசீனுதமிழ்
2005பம்பரக்கண்ணாலேமுருகாதமிழ்
2006மெர்க்குரி பூக்கள்கார்த்திக்தமிழ்
2006உயிர்சுந்தர்தமிழ்
2006கிழக்கு கடற்கரை சாலைசந்தோஸ்தமிழ்
2007Adavari Matalaku Ardhalu Veruleவாசுதெலுங்கு
2008வல்லமை தாராயோசேகர்தமிழ்கௌரவத் தோற்றம்
2008பூதங்கராசுதமிழ்
2009இந்திரா விழாசந்தோஸ் சீனிவாசன்தமிழ்
2010ரசிக்கும் சீமானேநந்துதமிழ்
2010போலிஸ் போலிஸ்தெலுங்குதமிழில் குற்றப்பிரிவு
2010துரோகிசாமி சீனிவாசன்தமிழ்
2010மந்திரப் புன்னகைதமிழ்கௌரவத் தோற்றம்
2011உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன்பாபிமலையாளம்தமிழில் சத்ரிய வம்சம்
2011தாதாராஜீவ்தெலுங்கு
2011சதுரங்கம்திருப்பதிசாமிதமிழ்
2012நண்பன்வெங்கட் ராமகிருஷ்ணன்தமிழ்
2012நி்ப்புசிறீராம்தெலுங்குதமிழில் ரவடி ராஜா
2012ஹீரோபிரேமானந்த்மலையாளம்
2012பாகன் (திரைப்படம்)சுப்பரமணியம்தமிழ்
2013புட்டிமலையாளம்
2014எதிரி எண் 3தமிழ்தயாரிப்பு நிலையில்
2014ஓம் சாந்தி ஓம்தமிழ்படபிடிப்பில்
2014நம்பியார்ராமச்சந்திரன்தமிழ்படபிடிப்பில்
2015சௌகார்பேட்டைதமிழ்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.