சிசெரோ

மார்க்கசு துல்லியசு சிசெரோ (/ˈsɪs[invalid input: 'ɨ']r/; பாரம்பரிய இலத்தீன்: [ˈmaːr.kʊs ˈtʊl.li.ʊs ˈkɪ.kɛ.roː]; பண்டைக் கிரேக்கம்: Κικέρων Kikerōn, ஆங்கில வடிவம் துல்லி[1] /ˈtʌli/; 3 ஜனவரி கி.மு106 – 7 திசம்பர் கி.மு43) ஒரு உரோமானியரும் மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மன்ற உறுப்பினரும், அரசியலமைப்பாளரும் ஆவார்.. இவர் உரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக உரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.[2][3]

சிசெரோ
(MARCUS TULLIUS CICERO)
கி.பி முதல் நூற்றாண்டுச் சிசெரோவின் சிலை, கேப்பிட்டோலினே அருங்காட்சியகம், உரோம் நகர்
மன்ற உறுப்பினர், உரோமக் குடியரசு
பதவியில்
கி.மு63  கி.மு63
உடன் பணியாற்றுபவர் கையசு அண்டோனியசு கைபிரிடா
முன்னவர் உலூசியசு ஜூலியசு சீசர், கையசு மார்சியசு ஃபிகுலசு
பின்வந்தவர் டெசிமசு ஜூனியசு சிலானசு, உலூசியசு இலிசினசு முரேனா
தனிநபர் தகவல்
பிறப்பு 3 January 106 BC
ஆர்ப்பினம், உரோமக் குடியரசு
(இக்கால ஆர்ப்பினோ, இலாசியோ, இத்தாலி)
இறப்பு 7 திசம்பர் கி.மு43 (அகவை 63)
[ஃபோர்மியா]], உரோமக் குடியரசு
தேசியம் உரோமானியர்
அரசியல் கட்சி Optimate
பணி அரசியலாளர், வழக்கறிஞர், சொற்பொழிவாளர், மெய்யியலாளர், கவிஞர்
சிசெரோ
கருப்பொருட்கள் அரசியல், சட்டம், மெய்யியல், யாப்பியல்
இயக்கம் இலத்தீனப் பொற்காலம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
சொற்பொழிவுகள்: In Verrem, In Catilinam I-IV, Philippicae
Philosophy: De Oratore, De Re Publica, De Legibus, De Finibus, De Natura Deorum, De Officiis

இலத்தின மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தீனில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பீன்னாட்களில் 19ஆம் நூற்றாண்டுவரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது..[4] Michael Grant அவர்களின் கூற்றுப்படி,சிசெரோவைப் போல "வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ணவோட்டத்திலும் செலுத்தியதில்லை".[5] சிசெரோ கிரேக்க மெய்யியலின் முத்ன்மையான சிதனைப்பள்ளிகலையுமுரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை இலத்தின மொழியில் உருவாகினார். காட்டாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி செவ்வியல் இலத்தீன் மொழியை வளப்படுத்தினார்.[6] இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் எனவெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர்பெற்றார்.

இவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையகும். உரோம வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்ருகளை அளித்து வருகின்றன. குறிப்பாக உரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.[7]

நூல்கள்

தொடக்க காலச் சால்சிடோனியன் தேவாலயம் சிசெரோவை உண்மையான பேகன் என அறிவித்தது. எனவே இவரது நூல்கள் காப்பாற்றுவதற்குரியன வாயின. பின்வந்த உரோமனிய எழுத்தாளர்கள் இவரது நூல்களில் இருந்து பரவலாக எடுத்தாண்டுள்ளனர் De Re Publica (குடியரசு பற்றி) , De Legibus (சட்டங்கள் பற்றி),ஆகிய நூல்களும் பிற நூல்களும் நிலவும் இத்தகைய பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய வழக்கங்கள், பண்டைய சட்டம் சார்ந்து சிசெரோ உரிமைகள் குறித்த தொடக்க நிலைக் கருதல்களை மெல்ல விளித்துள்ளார். சிசெரோ நூலகளில் ஆறு கவிதை நூல்களும் கிடைத்துள்ளன. மேலும் எட்டு மெய்யியல் நூல்களும் கிடைத்துள்ளன. அவரது சொற்பொழிவுகளில் 88 உரைகள் பதிவாகியுள்ளன. ஆனால் 55 மட்டுமே அவற்றில் இப்போது கிடைக்கின்றன.

சொற்பொழிவுகள்
  • (81 BC) Pro Quinctio (குவிண்டியசுவை ஆதரித்து)
  • (80 BC) Pro Roscio Amerino ( அமெரியாவின்செக்சுடசு உரோசியசுவை ஆதரித்து )
  • (70 BC) In Verrem I, II.1-5 (கையசு வெரசுவை, அல்லது வெரசுவின் சொற்பொழிவுகளை எதிர்த்து)
  • (69 BC) Pro Fonteio ( ஃபொண்டியசுவை ஆதரித்து)
  • (69 BC) Pro Caecina ( அவுலசு கேயசினா செவெரசு வை ஆதரித்து)
  • (66 BC) Pro Cluentio ( அவுலசு கிலுயண்டியசுவை ஆதரித்து)
  • (66 BC) De Imperio Gnaei Pompei or De Lege Manilia ("On the Command of Gnaeus Pompey", in support of Pompey's appointment to command the Roman forces against Mithridates VI)
  • (63 BC) De Lege Agraria contra Rullum I-III (உரூல்லசு முன்மொழிந்த வேளாண் சட்டத்தைப் பற்றி)
  • (63 BC) In Catilinam I-IV (கேட்டிலினே சொற்பொழிவுகள் அல்லது கேட்டிலினேவை எதிர்த்து]]) Archived மார்ச் 2, 2005 at the Wayback Machine.
  • (63 BC) Pro Rabirio Perduellionis Reo ( பழிதூற்றிய நீதிமன்றத்தில்,கையசு இராபிரியசுவை ஆதரித்து கையசு இராபிரியசு)
  • (62 BC) Pro Sulla (ப்ப்ளியசு கார்னீலியசு சுல்லா வை ஆதரித்து)
  • (62 BC) Pro Archia Poeta (கவிஞர் அவுலசு இலிசினியசு ஆர்ச்சியாசு வை ஆதரித்து)
  • (59 BC) Pro Flacco (ஃபிலாக்கசுவை ஆதரித்து)
  • (57 BC) Post reditum in senatu (நாடு மீண்ட்தும் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை)
  • (57 BC) Post reditum ad Quirites (நாடுமீண்டதும் மக்களுக்கு ஆற்றிய உரை)
  • (57 BC) De domo sua (தன் வீடு பற்றி)
  • (57 BC) De Haruspicum responsis (haruspices வுக்கான எதிர்வினை)
  • (56 BC) Pro Sestio (In defense of Sestius)
  • (56 BC) In Vatinium (வாட்டினியசுவின் குறுக்கு உசாவல்)
  • (56 BC) Pro Caelio (மார்க்கசு சயேலியசு உரூஃபசுவை அதரித்து): ஆங்கில மொழிபெயர்ப்பு
  • (56 BC) De Provinciis Consularibus (சட்டமன்ற மாநிலங்கள் பற்றி)
  • (56 BC) Pro Balbo (கார்னீலியசு பார்பசுவை ஆதரித்து)
  • (55 BC) In Pisonem (பிசோவை எதிர்த்து)
  • (54 BC) Pro Rabirio Postumo (இராபிரியசு போசுதுமசுவை ஆதரித்து)
  • (52 BC) Pro Milone (டிட்டசுஅன்னியசு மிலோ வை ஆதரித்து)
  • (46 BC) Pro Marcello (மார்செல்லசு அழைப்பை ஆதரித்து Marcellus)
  • (46 BC) Pro Ligario (குவிண்டசு இலிகாரியசு வை ஆதரித்து)
  • (45 BC) Pro Deiotaro ( அரசர் டியோட்டரசு வை ஆதரித்து)
  • (44-43 BC) Philippicae (மார்க் அந்தோனியை எதிர்த்த 14 கண்டன உரைகள், கண்டன உரைகள் I–XIV[8]
கவிதையும் மெய்யியலும்
  • (55 BC) De Oratore ad Quintum fratrem libri tres (சொற்பொழிவாளர், தன் உடன்பிறப்பு குவிண்டசுக்கான மூன்று நூல்கள்)
  • (51 BC) De Re Publica (குடியரசு பற்றி)
  • (?? BC) De Legibus (சட்டங்கள் பற்றி)
  • (46 BC) Brutus (புரூட்டசு)
  • (46 BC) Orator (சொற்பொழிவாளர்)
  • (45 BC) Hortensius – மெய்யியலில் ஓர் உசாவல், இப்போது கிடைக்கவில்லை.
  • (45 BC) Consolatio – இதே ஆண்டு ஃபிப்ரவரியில் இவரது மகன் துலியா இறந்த வருத்தம் தணிக்க எழுதியது; இதுவும் கூட கிடைக்கவில்லை
  • (45 BC) Academica (கல்விக்கழக ஐயுறவியல் குறித்து)
  • (45 BC) De Finibus Bonorum et Malorum (நன்மை, தீமையின் விளைவுகள் குறித்து) –அறவியல் பற்றிய நூல்.[9] Title also translated as "On Moral Ends"[10]
  • (45 BC) Tusculanae Disputationes (டசுகுலான் எதிர் விவாதங்கள்) – இறப்பு, வலி, மன இறுக்கமும் சார்ந்த உணர்ச்சிகளும், மகிழ்ச்சி ஆகிய உளவியல் நிலைகளைப் பற்றி 5 நூல்கள்
  • (45 BC) De Natura Deorum (கடவுள்களின் தன்மை பற்றி)
  • (44 BC) Topica
  • (44 BC) De Divinatione (தெய்வீகம் பற்றி)
  • (44 BC) De Fato (விதி பற்றி)
  • (44 BC) De Amicitia (நட்பு பற்றி)
  • (44 BC) Cato Maior de Senectute (முதுமையில் முதுவர் கேட்டோ)
  • (44 BC) Laelius de Amicitia (நட்பு பற்றி இலேயலியசு)
  • (44 BC) De Gloria (புகழ் பற்றி) – now lost.
  • (44 BC) De Officiis (கடமைகள் பற்றி)
கடிதங்கள்

கிட்டதட்ட இவர் எழுதிய 900 கடிதங்களும் பிறர் இவருக்கு எழுதிய 100கடிதங்களும் கிடைத்துள்ளன.

  • (68–43 BC) Epistulae ad Atticum (அட்டிகசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (59–54 BC) Epistulae ad Quintum Fratrem (உடன்பிறப்பு குவிண்டசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (43 BC) Epistulae ad Brutum (புரூட்டசுக்கு எழுதிய கடிதங்கள்)
  • (62–43 BC) Epistulae ad Familiares (நண்பர்களுக்கான கடிதங்கள்)

புனைவிலக்கியப் படம்பிடிப்புகள்

குறிப்புகள்

  1. E.g. H. Jones, Master Tully: Cicero in Tudor England (Nieuwkoop: De Graaf, 1998).
  2. Rawson, E.: Cicero, a portrait (1975) p.303
  3. Haskell, H.J.: This was Cicero (1964)p.300–301
  4. Merriam-Webster, Inc (January 1995). "Ciceronian period". Merriam-Webster's Encyclopedia Of Literature. Merriam-Webster. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-042-6. http://books.google.com/books?id=eKNK1YwHcQ4C&pg=PA244. பார்த்த நாள்: 27 August 2013.
  5. Cicero, Selected Works, 1971, pp.24
  6. Conte, G.B.: "Latin Literature: a history" (1987) p.199
  7. Miriam Griffin; John Boardman; Jasper Griffin; Oswyn Murray (15 January 2001). The Oxford Illustrated History of the Roman World. Oxford University Press. பக். 76-. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-285436-0. http://books.google.com/books?id=w95Nb-BJWRcC&pg=PA76. பார்த்த நாள்: 10 August 2011.
  8. "M. Tullius Cicero, Orations: The fourteen orations against Marcus Antonius (Philippics) (ed. C. D. Yonge)". Perseus.tufts.edu. பார்த்த நாள் 2013-10-03.
  9. "E-Texts : De Finibus, Book I". Epicurus.info. பார்த்த நாள் 2013-10-03.
  10. Cicero On Moral Ends. (De Finibus) Julia Annas – editor, Raphael Woolf – transltr Cambridge University Press, 2001

மேற்கோள்கள்

Opera omnia, 1566
  • Badian, E: "Cicero and the Commission of 146 B.C.", Collection Latomus 101 (1969), 54-65.
  • Taylor Caldwell (1965). A Pillar of Iron. New York: Doubleday & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-385-05303-7.
  • Cicero, Marcus Tullius, Cicero’s letters to Atticus, Vol, I, II, IV, VI, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், Great Britain, 1965
  • Cicero, Marcus Tullius, Latin extracts of Cicero on Himself, translated by Charles Gordon Cooper, University of Queensland Press, Brisbane, 1963
  • Cicero, Marcus Tullius, Selected Political Speeches, Penguin Books Ltd, Great Britain, 1969
  • Cicero, Marcus Tullius, De Officiis (On Duties), translated by Walter Miller. Harvard University Press, 1913, ISBN 978-0-674-99033-3, ISBN 0-674-99033-1
  • Cicero, Marcus Tullius, Selected Works, Penguin Books Ltd, Great Britain, 1971
  • Cowell, F R: Cicero and the Roman Republic (Penguin Books, 1948; numerous later reprints)
  • Everitt, Anthony (2001). Cicero: the life and times of Rome's greatest politician. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-375-50746-9.
  • Erich S. Gruen (1974). The Last Generation of the Roman Republic. University of California Press.
  • Haskell, H. J. (1942). This was Cicero. Alfred A. Knopf.
  • March, Duane A. (1989). "Cicero and the 'Gang of Five'". Classical World 82 (4): 225–234. doi:10.2307/4350381.
  • Narducci, Emanuele (2009). Cicerone. La parola e la politica. Laterza. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:88-420-7605-8.
  • புளூட்டாக் Penguins Classics English translation by Rex Warner, Fall of the Roman Republic, Six Lives by Plutarch: Marius, Sulla, Crassus, Pompey, Caesar, Cicero (Penguin Books, 1958; with Introduction and notes by Robin Seager, 1972)
  • Rawson, Beryl: The Politics of Friendship: Pompey and Cicero (Sydney University Press, 1978)
  • Rawson, Elizabeth:
    • "Cicero the Historian and Cicero the Antiquarian", JRS 62 (1972), 33-45.
    • Cicero: A Portrait (Allen Lane, Penguin Books Ltd., 1975) ISBN 0-7139-0864-5. Revised edition: Bristol Classical Press, 1983. ISBN 0-86292-051-5. American edition of revised edition: Cornell University Press, 1983. ISBN 0-8014-1628-0 (hardcover); ISBN 0-8014-9256-4 (paperback).
  • Richards, Carl J. (2010). Why We're All Romans: The Roman Contribution to the Western World. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7425-6778-8.
  • Scullard, H. H. From the Gracchi to Nero, University Paperbacks, Great Britain, 1968
  • Smith, R E: Cicero the Statesman (Cambridge University Press, 1966)
  • Stockton, David: Cicero: A Political Biography (Oxford University Press, 1971)
  • James Leigh Strachan-Davidson (1936). Cicero and the Fall of the Roman Republic. Oxford: Oxford University Press.
  • Taylor, H. (1918). Cicero: A sketch of his life and works. Chicago: A. C. McClurg & Co..
  • Wistrand, M. (1979). Cicero Imperator: Studies in Cicero's Correspondence 51-47 B.C.. Göteborg.
  • Frances Yates (1974). The Art of Memory. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-95001-8.

வெளி இணைப்புகள்

பொது
மெய்யியல்
சிசெரோவின் நூல்கள்
நூல்தொகைகளும் அவர்கால விவரிப்புகளும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.