திற நூலகம்

திறந்த வெளி நூலகம் (Open Library) என்பது "பதிப்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வலைப்பக்கத்தை" உருவாக்கும் நோக்குடன் செயல்படும் இணையத் திட்டம் ஆகும். இதனை ஏரன் சுவோற்சு[2][3], புரூசுட்டர் கேல்[4] மற்றும் பலர் தொடங்கினர். இது ஒரு இணைய ஆவணகத் திட்டம் ஆகும். இத்திட்டத்துக்கான ஒரு பகுதி நிதியை கலிப்போர்னியா அரசு நூலகமும் கேல்/ஆசுட்டின் அறக்கட்டளையும் வழங்கியுள்ளன.

திறந்த வெளி நூலகம்
செப்டம்பர் 2011 இல் திறந்த வெளி நூலக வலைத்தள முகப்புப் பக்கம்
உரலிopenlibrary.org
மகுட வாசகம்ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வலைப்பக்கம்
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஎண்மிய நூலகப் பட்டியல்
பதிவு செய்தல்இலவசம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
வெளியீடு2006 (2006)
வருமானம்நன்கொடை
அலெக்சா நிலை 16,427 (April 2014)[1]
தற்போதைய நிலைசெயற்பாட்டில் உள்ளது

இத்திட்டம் பல்வேறு பொதுக்கள நூல்களையும் தற்போது அச்சில் இல்லாத நூல்களையும் இணையத்தில் படிக்கும் வசதியைத் தருகிறது.

மேற்கோள்கள்

  1. "Openlibrary.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2014-04-01.
  2. "A library bigger than any building". BBC News. 2007-07-31. http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/6924022.stm. பார்த்த நாள்: 2010-07-06.
  3. Grossman, Wendy M (2009-01-22). "Why you can't find a library book in your search engine". The Guardian (London). http://www.guardian.co.uk/technology/2009/jan/22/library-search-engines-books. பார்த்த நாள்: 2010-07-06.
  4. "Aaron Swartz: howtoget". பார்த்த நாள் 2015-06-05.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.