சமச்சீர்மை

சமச்சீர் (symmetry) என்பது, அன்றாட மொழியில் ஒன்றின் இசைவிணக்கம், அழகான விகிதம் மற்றும் சமநிலையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும்.[1] இது துல்லியமானதும் தெளிவாக வரையறுக்கப்பட்டதுமான ஒன்று. இதனால், இதனைக் கணித அல்லது இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி விளக்கவும், நிறுவவும் முடியும்.[2][3][lower-alpha 1]

துனிசியாவிலுள்ள ஒரு மசூதியின் முன்கூட சமச்சீர் வளைவுகள்.

சமச்சீர் என்னும் இந்தக் கருத்துரு பல்வேறு விதமாகப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் "சமச்சீர்க்" கருத்துரு பின்வரும் இடங்களில் பயன்படுகின்றது:

  • கால ஓட்டம் தொடர்பில்,
  • இடஞ்சார்பில்,
  • தெறிப்பு, சுழற்சி, அளவீடு போன்றவற்றினூடான வடிவ மாற்றங்கள் தொடர்பில்,
  • பிற வகையான செயல்முறை மாற்றங்கள் தொடர்பில்,
  • சமச்சீர் பல்லுறுப்பு
  • சமச்சீர் குலம்
  • சமச்சீர் கல்வி[4] என பல்வேறு நிலைகளிலும் பயன்படுகிறது.

மருத்துவம்

மனித உடலின் சமச்சீர்மையைக் காட்டப் பயன்படுத்தப்படும் லியொனார்டோ டா வின்சியின் படைப்பு (ca. 1487)

தன்னெதிர்ப்பினால் உருவாகும் முடக்குவாத நோயை வகைப்படுத்தும் விதிகளில் ஒன்றாக, சமச்சீராக (உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள அதேபோன்ற மூட்டுப்பகுதிகள்) இந்நோயினால் பாதிப்படைவது சேர்க்கப்பட்டுள்ளது. என்றாலும், உடலின் இருபக்கக்கங்களிலும் உள்ள சிறு மூட்டுகளில் ஏற்படும் முடக்குவாத நோய் பாதிப்பின் சமச்சீர்மை அறுதியாக இல்லாவிட்டாலும் முடக்குவாதமாகவே வகைப்படுத்தப்படுகிறது[5].

கணிதம்

எண்முக சுழற்சி சமச்சீர்மையைக் குறிக்கும் கோள சமச்சீர் குலம். மஞ்சள் பகுதி அடிப்படை ஆட்களத்தைக் காட்டுகிறது.
எதிரொளிப்பு சமச்சீர்மை, சுழற்சி சமச்சீர்மை, தன்-வடிவொப்புமை ஆகிய மூன்று சமச்சீர்களும் கொண்ட பகுவல் போன்ற வடிவம்.

வடிவவியல், நுண்கணிதம், தொகையிடல், தொடர்கள், நேரியல் இயற்கணிதம், நுண் இயற்கணிதம், வகையீட்டுச் சமன்பாடுகள், நிகழ்தகவு போன்ற கணிதத்தின் பல பிரிவுகளிலும் சமச்சீர்மை காணப்படுகிறது.

ஒரு பொருளானது குறிப்பிட்ட சில உருமாற்றங்களின்கீழ் அதன் சில அளவீடுகள் மாற்றமுறாமல் அமையும் பண்பே சமச்சீர்மையாகும். ஒரு கட்டமைப்புள்ள பொருள் X ஐ அதன் கட்டமைப்பு மாறாமல் X ஆகவே மாற்றும் கோப்பாக சமச்சீர் அமைகிறது. எடுத்துக்காட்டாக,

சமூகத் தொடர்புகளில் சமச்சீர்மை

பலவிதமான சூழல்களிலும், சமூக இடைவினைகளிலும், சமச்சீரற்ற சமநிலைகளிலும், மக்கள் பெரும்பாலும் சமச்சீர்மையைக் காண்கின்றனர். சமச்சீர்மை என்பது, நேர்எதிர்மை, பிரதிச்சலுகை, இணைக்கிணை வாங்கல், பச்சாதாபம் புரிந்துணர்வு, பரிவு, செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோருதல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், உரையாடல், மரியாதைநீதி, மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை மதிப்பீடுகள் செய்வதை உள்ளடக்கியதாகும். பொதுக் கொள்கைகள், திட்டவட்டமான தீர்ப்புகள் இவற்றுக்கிடையே, ஆழ்ந்தாராய்ந்து எச்சரிக்கையாய்ச் செய்யும் பரஸ்பர சரிசெய்தல் மூலம் பெறப்படும் சமநிலை, பிரதிபலிப்புச் சமநிலை ஆகும்.

சமச்சீர் கலந்துரையாடல்களில், வெளிப்படும் ஒழுக்கம் சார்ந்த வாக்கியம், "நாம் அனைவரும் சமம்", "நாம் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள்" போன்றவையாகும். சமச்சீரற்ற கலந்துரையாடல்களில், வெளிப்படும் வாக்கியம், "நான் சிறப்பானவன். நானே உன்னைவிட மேலானவன்" போன்றவையாகும்.

சம தரத்தில் உள்ளவர்களின் உறவுகள், சமச்சீர் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஆனால், அதிகார உறவுகள் சமச்சீரற்ற தன்மை கொண்டவை என்பதே மனித உறவுகளின் தங்க விதி ஆகும்.[6] சமச்சீர் உறவுகளை 'இதற்கும் அதற்கும் சரியாகிப் போய்விட்டது' என்ற எளிய விளையாட்டு உத்திகளின் மூலம் குறிக்கலாம்.[7]

கட்டுமானவியலில் சமச்சீர்மை

ஈரான் நாட்டின் (Iran), இஸ்பானில் (Isfahan), லாஃபொல்லா (Lotfollah) மசூதியின் மேற்கூரையில் 8-மடங்கு சமச்சீர்மை
தாஜ் மஹாலை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், இருதரப்பு சமச்சீர்மையும், மேலிருந்து திட்ட அமைப்பில் பார்த்தால், நான்கு மடங்கு சமச்சீர்மையும் தெரியும்.

கட்டிடக்கலையின் ஒவ்வொரு அலகிலும், சமச்சீர்மை முக்கிய இடம் பெற்றுள்ளது. கட்டிடக்கலையில் சமச்சீர்மைக்கு உதாரணம்: கோதிக் தேவாலயங்கள், வெள்ளை மாளிகைகுதுப்மினார், தஞ்சாவூர் கோபுரம், போன்றவை. இத்துடன், கட்டிடங்களில் பயன்படுத்தப்படும், தரைத் திட்டங்கள், பல்லடுக்குத்தரை, அடுக்கழகுத்திரை, பல்வணிப்பதிகல் போன்ற கட்டுமானவியல் கூறுகளும் சமச்சீர்மைத் தன்மை பெற்றுள்ளன.

தாஜ் மகால் போன்ற இஸ்லாமிய கட்டிடங்களின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றில், சமச்சீர் தன்மையின் விரிவான பயன்பாடு மிகுந்து காணப்படுகின்றது.[8][9] அல்கம்றா போன்ற மூரிஷ் கட்டிடங்கள், இயல் பெயர்ச்சி மற்றும் பிரதிபலிப்பு சமச்சீர் மற்றும் சுழற்சி மூலம் உருவாக்கப்பட்ட சிக்கலான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[10]

சிறப்பில்லாத கட்டிடக் கலைஞர், சமச்சீர்மை, பொருண்மை, வரைபட வடிவமைப்பு தளவமைப்பு போன்றவற்றை நம்பி இருப்பார் என்று கூறப்படுகிறது.[11] சர்வதேச பாணியில் தொடங்கி நவீன கட்டிடக்கலையானது, இறக்கைகளையும், பொருண்மைச் சமநிலையையும் சார்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

மண் மற்றும் உலோகப் பாண்டங்களில் சமச்சீர்மை

ஒரு மட்பாண்ட சக்கரத்தில் எறியப்படும் களிமண் குவியல் சுழற்சி சமச்சீரமைப்பைப் பெறுகின்றது.

மட்பாண்டங்களை வடிவமைப்பதற்கு மட்பாண்ட சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதால், அவை வலுவான சமச்சீர்மை பெற்றுள்ளன.

மட்பாண்ட சக்கரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மட்பாண்டங்கள் செங்குத்து அச்சில் சுழல்வதால், அதன் சுழற்சியில் முழு சுழற்சி சமச்சீர் அமைப்பைப் பெறுகிறது. மேலும், செங்குத்து திசையில் போதுமான அளவு மாற்றங்களைச் செய்யும் அளவுக்கு சுதந்திரத்தை அனுமதிக்கிறது.

உலோகப் பாண்டங்கள் செய்யும் போது, மட்பாண்டங்கங்களைப் போல் சக்கரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இவற்றில் இயல்பான சுழற்சி சமச்சீர் தன்மை அமைவது இல்லை. கி.மு. 17 ஆம் நூற்றாண்டில் பண்டைய சீனர்கள், வெண்கல வார்ப்புகளைப் பயன்படுத்தி சமச்சீர் அமைப்புகள் கொண்ட உலோகப் பாண்டங்களை உருவாக்கினர். வெண்கலப் பாத்திரங்கள், இருபக்க கலை அலங்கார வேலை நோக்குருக்களையும், ஒரே மாதிரியான விளிம்பு வடிவமைப்பையும் காட்சிப்படுத்தின.[12]

ஒட்டுத்தையலில் சமச்சீர்மை

ஒரு தொகுப்புக்கு வழக்கமாக 9, 16, அல்லது 25 துண்டுத் துணிகள் சேர்த்து ஒட்டுத்தையல் வடிவமைப்புத் துணிகள் மற்றும் கைவினை வேலைப்பாட்டு வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் துணிகள் பெரும்பாலும் முக்கோண வடிவங்களையும், சதுர வடிவங்களையும், பெற்றுள்ளதால் இவற்றில் சமச்சீர்மைத் தன்மை வெளிப்படுகிறது.[13]

தரை விரிப்புக் கம்பளங்களில் சமச்சீர்மை

நாற்கர சமச்சீர்மை கொண்ட பாரசீக (Persian) கம்பளம்.

பல்வேறு கலாச்சாரங்களில், கம்பளம் மற்றும் தரைவிரிப்புகளில் சமச்சீர்மைப் பயன்பாடு நீண்ட பாரம்பரியப் பண்பு கொண்டுள்ளது. அமெரிக்க நவாஜோ இந்தியர்கள் திடமான மூலைவிட்டங்கள் மற்றும் செவ்வக வடிவங்களை உடைய சிந்தனை அடிப்படையிலான கருத்து அலங்கார வேலை நோக்குருக்களைப் பயன்படுத்தினர். பல கிழக்கத்திய விரிப்புகள் கடுஞ் சிக்கலான, புதிரான, பிரதிபலிப்பு மையங்களையும், எல்லைகளையும், விளிம்பு வடிவமைப்புகளையும் கொண்டுள்ளன.

செவ்வக விரிப்புகள் பொதுவாக நாற்கோண சமச்சீர் வடிவங்களைப் பயன்படுத்துகின்றன. அதாவது, கிடைமட்ட அச்சுகளும், செங்குத்து அச்சுகளும், முழுவதும் பிரதிபலிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டன.[14][15]

இசை வடிவங்களில் சமச்சீர்மை

முதன்மை மற்றும் சிறிய அளவு வெள்ளை பியானோ விசைகளில் டி (D)க்கு சமமான முக்கூற்றுத்தொகுதி (file)

ஸ்டீவ் ரீச் (Steve Reich), பெலா பார்டோக் (Béla Bartók), ஜேம்ஸ் டென்னி (James Tenney) போன்ற பல இசையமைப்பாளர்கள், இசை வடிவங்களில் சமச்சீர்மை கொண்ட பரம பெருக்க வடிவம் (ஏ.பி.சி.பி.ஏ - ABCBA) போன்றவற்றைப் பயன்படுத்தி முறையான இசை வடிவமைப்பில் இருந்த தடைகளைக் களைந்தனர். சமச்சீர்மை இசை அமைப்பில் ஒரு முறையான வடிவத்திற்கு வழிகோலியது. இசையமைப்பாளர் பாச் (Bach) பாரம்பரிய இசையில், பல்வகை நிலை மாற்றம், வரிசைமாற்றம், மாற்றமின்மை எனும் சமச்சீர்மைக் கருத்துக்களைப் பயன்படுத்தினார்.[16]

கலை மற்றும் கைவினைகளில் சமச்சீர்மை

கெல்ட்டிய இன  முடிச்சு வேலை

அனைத்து வகையான பொருட்களிலும் சமச்சீர் தன்மைத் தோற்றம் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணங்கள்: மணி வேலைப்பாடுகள், மரச்சாமான்கள், மணல் ஓவியங்கள், முடிச்சு வேலைகள், முகமூடிகள், வாத்தியக் கருவிகள் போறவை.

எம்.சி. எஷ்ஷர் (M.C. Escher) தம்முடைய சுவரோவியங்கள், பீங்கான், தாழ்வார ஓடுகள், கூரை ஓடுகள், உள்ளீடற்ற ஓடுகள், பல்வணிப்பதிகல், நெசவுத்தொழில், மெழுகு அச்சுகள், கம்பளத் தயாரிப்பு, சித்திரத்தையல் போன்ற கலை மற்றும் கைவினை படிவங்களில் சமச்சீர் தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.[17] 

குறிப்புகள்

  1. For example, Aristotle ascribed spherical shape to the heavenly bodies, attributing this formally defined geometric measure of symmetry to the natural order and perfection of the cosmos.

மேற்கோள்கள்

  1. "symmetry". Online Etymology Dictionary.
  2. Zee, A. (2007). Fearful Symmetry. Princeton, N.J.: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-13482-6.
  3. Symmetry and the Beautiful Universe, Christopher T. Hill and Leon M. Lederman, Prometheus Books (2005)
  4. Mainzer, Klaus (2005). Symmetry And Complexity: The Spirit and Beauty of Nonlinear Science. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-256-192-7.
  5. William S. Wilke (ஆகத்து 2010). "Rheumatoid Arthritis". The Cleveland Clinic Foundation. பார்த்த நாள் 3 அக்டோபர் 2016.
  6. Emotional Competency: Symmetry
  7. "The Symmetry Principle" (2008). பார்த்த நாள் 28 September 2015.
  8. Williams: Symmetry in Architecture. Members.tripod.com (1998-12-31). Retrieved on 2013-04-16.
  9. Aslaksen: Mathematics in Art and Architecture. Math.nus.edu.sg. Retrieved on 2013-04-16.
  10. Derry, Gregory N. (2002). What Science Is and How It Works. Princeton University Press. பக். 269–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4008-2311-6. https://books.google.com/books?id=Dk-xS6nABrYC&pg=PA269.
  11. "Behind the Scenes: Edgar Martins Speaks". New York Times (31 July 2009). பார்த்த நாள் 11 November 2014. "“My starting point for this construction was a simple statement which I once read (and which does not necessarily reflect my personal views): ‘Only a bad architect relies on symmetry; instead of symmetrical layout of blocks, masses and structures, Modernist architecture relies on wings and balance of masses.’"
  12. The Art of Chinese Bronzes. Chinavoc (2007-11-19). Retrieved on 2013-04-16.
  13. Quate: Exploring Geometry Through Quilts. Its.guilford.k12.nc.us. Retrieved on 2013-04-16.
  14. Marla Mallett Textiles & Tribal Oriental Rugs. The Metropolitan Museum of Art, New York.
  15. Dilucchio: Navajo Rugs. Navajocentral.org (2003-10-26). Retrieved on 2013-04-16.
  16. see ("Fugue No. 21," pdf or Shockwave)
  17. Cucker, Felix (2013). Manifold Mirrors: The Crossing Paths of the Arts and Mathematics. Cambridge University Press. பக். 77–78, 83, 89, 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-72876-8.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.