மூரிஷ் பள்ளிவாசல்

மூரிஷ் பள்ளிவாசல் (ஆங்கிலம்:Moorish Mosque) எனப்படும் இந்த இசுலாமிய தொழுகை சாலை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபுர்த்தலா நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. அக்காலத்திய ஆட்சியாளர்களின் மத நல்லிணத்திற்கு சான்றாக விளங்குகிற இப்பள்ளிவாசலை, இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.[1]

மூரிஷ் பள்ளிவாசல் கபுர்த்தலா
Moorish Mosque, Kapurthala
பஞ்சாப் கபுர்த்தலாவில் உள்ள மூரிஷ் பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கபுர்த்தலா, பஞ்சாப்,  இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்31°22′08″N 75°22′52″E
சமயம்இசுலாம்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்கபுர்த்தலா
நிலைபள்ளிவாசல்
தலைமைமகாராஜா ஜகத்சித் சிங்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)மன்சூர் எம். மாண்டிக்ஸ்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிஇசுலாமிய கட்டிடக்கலை, மூரிஷ் ரிவைவல் கட்டிடக்கலை
நிறைவுற்ற ஆண்டு1930
கட்டுமானச் செலவுரூபாய் ஆறு இலட்சம் ( 600,000)
அளவுகள்
பொருட்கள்சலவைக்கல்

மொரோக்கோவின் மர்ரகேஷ் நகரின் கிராண்ட் மசூதியின் அடிப்படை தோற்றமளிப்பதாக உள்ள இப்பள்ளிவாயல், பிரஞ்சு கட்டிடக்கலைஞர் 'எம். மாண்டிக்ஸ்' என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதன் வரலாறு மற்றும் கலாச்சாரப் பெருமை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இது, பஞ்சாபின் 'மினி பாரிஸ்' என அழைக்கப்படும் கபுர்த்தலாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசூதி தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த ஒன்றாகவும் கூறப்படுகிறது.[2]


சான்றாதாரங்கள்

  1. "Aam Khas Bagh, Sirhind". www.discoveredindia.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 13 யூலை 2016.
  2. "Moorish Mosque in Kapurthala - India". www.beautifulmosque.com (ஆங்கிலம்) (© 2015). பார்த்த நாள் 2016-07-14.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.