இலங்கை சனாதிபதி

இலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (President of Democratic Socialist Republic of Sri Lanka) அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார்.

இலங்கை சனாதிபதி 
இலங்கையின் சின்னம்
தற்போது
மைத்திரிபால சிறிசேன

9 சனவரி 2015 முதல்
அதிகாரப்பூர்வ பட்டம்மேதகு சனாதிபதி
வாழுமிடம்சனாதிபதி மாளிகை
பதவிக் காலம்ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
முதல் இலங்கை சனாதிபதிவில்லியம் கொபல்லாவ
22 மே 1972
உருவாக்கப்பட்ட ஆண்டு22 மே 1972 (1972-05-22)
இணைய தளம்சனாதிபதி
Presidential Secretariat
This article is part of a series on the
politics and government of
இலங்கை

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.

அதிகாரங்களும் விதிமுறைகளும்

சனாதிபதிகளின் பட்டியல்

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.

கடைசித் தேர்தல்


8 சனவரி 2015 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[1]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
 மைத்திரிபால சிறிசேனபுதிய சனநாயக முன்னணி6,217,16251.28%
 மகிந்த ராசபக்சஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி5,768,09047.58%
ஆராச்சிகே இரத்நாயக்கா சிறிசேனதேசப்பற்றுள்ள தேசிய முன்னணி18,1740.15%
நாமல் அஜித் ராஜபக்சநமது தேசிய முன்னணி15,7260.13%
இப்ராகிம் மிஃப்லார்ஐக்கிய அமைதி முன்னணி14,3790.12%
ருவான்திலக்க பேதுருஐக்கிய இலங்கை மக்களின் கட்சி12,4360.10%
 ஐத்துருசு எம். இலியாசுசுயேட்சை10,6180.09%
துமிந்த நகமுவமுன்னிலை சோசலிசக் கட்சி9,9410.08%
 சிறிதுங்க ஜெயசூரியாஐக்கிய சோசலிசக் கட்சி8,8400.07%
சரத் மனமேந்திராபுதிய சிங்கள மரபு6,8750.06%
 பானி விஜயசிறிவர்தனசோசலிச சமத்துவக் கட்சி4,2770.04%
 அனுருத்த பொல்கம்பொலசுயேட்சை4,2600.04%
 சுந்தரம் மகேந்திரன்நவ சமசமாஜக் கட்சி4,0470.03%
முத்து பண்டார தெமினிமுல்லஅனைவரும் குடிகள், அனைவரும் அரசர்கள் அமைப்பு3,8460.03%
பத்தரமுல்லே சீலாரத்தனஜன செத்த பெரமுன3,7500.03%
பிரசன்னா பிர்யங்காராசனநாயக தேசிய இயக்கம்2,7930.02%
ஜெயந்தா குலதுங்கஐக்கிய இலங்கை பாரிய பேரவை2,0610.02%
விமால் கீகனகேஇலங்கை தேசிய முன்னனி1,8260.02%
செல்லுபடியான வாக்குகள்12,123,452100.00%
நிராகரிக்கப்பட்டவை140,925
மொத்த வாக்குகள்12,264,377
பதிவு செய்த வாக்காளர்கள்15,044,490
வாக்களிப்பு வீதம்81.52%

உசாத்துணை

  1. "Presidential Election – 2015, All Island Final Result". slelections.gov.lk. இலங்கை தேர்தல் திணைக்களம் (9 சனவரி 2015). பார்த்த நாள் 9 சனவரி 2015.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.