சதாரா அரசு

சதாரா அரசு (Satara state), மராத்திய போன்சலே வம்சத்தின் சத்திரபதி இராஜாராமின் இறப்பிற்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் வாரிசுரிமைக்கான பிணக்குகள் ஏற்பட்டது. [1]

வரலாறு

சத்திரபதி இராஜாராம் மறைவின் போது, சத்ரபதி சிவாஜியின் ஒன்பது வயது பேரனும், சத்திரபதி சம்பாஜியின் மகனுமான சாகுஜி தில்லி முகலாயர்களின் சிறையில் இருந்தார்.

இந்நிலையில் சத்திரபதி இராஜராமின் முதல் மனைவி தாராபாய், தன் சிறு வயது மகன் இரண்டாம் சிவாஜியை மராத்தியப் பேரரசராக அறிவித்து, தான் பேரரசின் காப்பாளாராக அறிவித்துக் கொண்டார்.

1707ல் தில்லி சிறையிலிருந்து விடுதலையான சாகுஜி, மராத்தியப் பேரரசை ஆளும் உரிமை கோரி சதாராவைக் கைப்பற்றி, நாக்பூர் இராச்சியத்திற்கும் மன்னரானார்.

இந்நிலையில் ராணி தாராபாயின் சக்களத்தியான (இராஜாராமின் இரண்டாம் மனைவி) இராஜேஸ்பாய், தன் மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூர் இராச்சியத்திற்கு மன்னராக்கினார்.

பின்னர் சாகுஜி, தாராபாயுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி சதாரா இராச்சியத்திற்கு, தராபாயின் பேரன் இரண்டாம் இராஜாராமுக்கு முடி சூட்டப்பட்டது.

சதாரா சுதேச சமஸ்தானம் ஆதல்

1817-1818ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய-மராத்தியப் போரில் ஆங்கிலேயர்களிடம் தோற்ற மற்ற மராத்திய இராச்சியங்கள் போன்று, சதாரா இராச்சியமும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திக் கொண்டு தன்னாட்சியின்றி ஆண்டனர்.

சதாரவை பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தல்

சதாராவின் மன்னர் சத்திரபதி சாகுஜி ராவ் அப்பா சாகிப் போன்சலே, ஆண் வாரிசு இன்றி 1848ல் இறந்ததால், கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை ஆளுநர் கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின் படி, சதாரா இராச்சியத்தின் பகுதிகள் அனைத்தும் 5 ஏப்ரல் 1848ல் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Satara state

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.