சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (Valikamam South-West Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 28 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனைக்கோட்டை, இளவாலை, மானிப்பாய், மாரீசன்கூடல், மாசியப்பிட்டி, மாதகல், முள்ளானை, நவாலி, பண்டத்தரிப்பு, பெரியவிளான், பிரான்பத்தை, சண்டிலிப்பாய், சாவற்காடு, சில்லாலை, சுதுமலை, உயரப்புலம், வடலியடைப்பு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்குத் தெற்காகக் குடாநாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகளைத் தொட்டு நிற்கின்ற இப்பிரிவின் வடக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன. கிழக்கில் தெல்லிப்பழை, உடுவில், நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மேற்கில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன. இதன் நிர்வாகத் தலைமையகம் சண்டிலிப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
நேர வலயம்இலங்கை தர நேரம் (ஒசநே+5:30)

இப் பிரிவின் பரப்பளவு 45 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.