கிராம சேவையாளர்

கிராம சேவையாளர், கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari / Grama Sevaka; "village officer" எனப்படுபவர் இலங்கை பொதுச் சேவைக்காக மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, இலங்கையின் பிரதேச செயலகங்களின் உப பிரிவான கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும்.[1] இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்க வேண்டும்.

இப்பதவி பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்த "கிராமத் தலைவர்" பதவிக்கு மாற்றீடாக 1970 களில் உருவாக்கப்பட்டது.

உசாத்துணை

  1. "Introduction - Grama Niladhari Service". பார்த்த நாள் 14 சூன் 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.