வி. கே. சசிகலா
வி. கே. சசிகலா (பிறப்பு: 18 ஆகத்து 1954) என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஆவார்.[3] இவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான செயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்தார். 2016இல் செயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வி. கே. சசிகலா | |
---|---|
![]() | |
அஇஅதிமுக பொதுச் செயலாளர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 31 திசம்பர் 2016[2] | |
முன்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 18 ஆகத்து 1954 திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | ம. நடராசன் (இறப்பு. மார்ச்சு 20, 2018) |
உறவினர் | டி.டி.வி.தினகரன் |
பிள்ளைகள் | இல்லை |
சமயம் | இந்து |
பட்டப்பெயர்(கள்) | சின்னம்மா |
சசிகலா நடராசன் என்று தொடக்கத்தில் அறியப்பட்டவர். அரசியல் நுழைவுக்குப் பின்பு வி. கே. சசிகலா என்றும், அதிமுக ஆதரவாளர்களால் சின்னம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.
செல்வி செயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.[4] இதனால் சசிகலா கட்சியை வழிநடத்தத் தன் அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
1954 ஆம் ஆண்டு ஆகத்து 18 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக சசிகலா பிறந்தார். இவரின் தாத்தா சந்திரசேகர் அவ்வூரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார்.
பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950 இன் இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள்.[5]
திருமணம்
சசிகலா 1973இல் மக்கள் தொடர்பாளர் என்ற அரசுப்பதவியில் இருந்தவரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான நடராசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தைத் திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.[5][6] நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடராசன் தன் பதவியை இழந்தார். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அப்பதவியை மீண்டும் பெற்றார்.
ஜெயலலிதாவுடன் பழக்கம்
பிறகு சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்தினார். அது மட்டுமின்றி நிழற்படக்கருவியை இயக்கும் முறையை அறிந்து கொண்டு திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு நிழற்படம் எடுக்கத் தொடங்கினார்.
அச்சமயத்தில் நடராசன் அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் சசிகலைவை செயலலிதாவிடம் அறிமுகப்படுத்த வேண்டினார். நடராசனிடம் அதற்கு உடன்பட்ட சந்திரலேகா செயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகப்படுத்தினார்.[7] முதலில் செயலலிதாவுக்கு ஒளிநாடாக்களை வாடகைக்கு கொடுத்து வந்த சசிகலா பின் செயலலிதாவின் கூட்டங்களை நிழற்படம் எடுக்கும் நிலைக்கு வந்தார். இவ்வாறு இருவரின் நட்பும் வளர்ந்தது.
1987இல் எம். ஜி. ஆர் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா மற்றும் ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில், ஜெயலலிதா பல அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா, இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலேயே தங்க ஆரம்பித்தார்.[5]
1991-க்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ஜெயலலிதா ஒரு ஆங்கில செய்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் சசிகலா என் உடன்பிறவாத சகோதரி என்றும் என் தாய்க்கு இணையானவர் என்றும் கூறினார்.[8] அதன்பிறகு அதிமுகவினர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது போல, சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கினர்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் இருந்தவர் சசிகலா. பிறகு ஜெயலலிதா மறைந்தபிறகு அவருடைய இறுதிச்சடங்குகளையும் சசிகலாவே முன்னின்று செய்தார்.
எதிரான வழக்குகள்
சொத்துக் குவிப்பு வழக்கு
1991–96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.[9]
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்தார். வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவருடையத் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.[10] அதன்பிறகு நீதிபதி குமாரசாமி கணக்ககுப்பிழை இருப்பதாகச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா உட்பட நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது.[11] இதையடுத்து சசிகலா பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் சரணடைந்தார்.[12]
அரசியல் வாழ்க்கை
அதிமுக பொதுச் செயலாளராக நியமனம்
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்த, அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு கட்சி பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி 2016 திசம்பர் 31 ஆம் தேதி அவர் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.[16]
முதலமைச்சாராக தேர்வு
பிப்ரவரி 5, 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக (முதலமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை இழக்க நேரிட்டது.[17]
மேற்கோள்கள்
- http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-removal-from-admk-general-secretary-post-117082100048_1.html
- Sasikala takes over as AIADMK general secretary
- "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்".
- சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! - விகடன்
- "The Taming Of The Shrewd". Jeemon Jacob. tehelka. பார்த்த நாள் 5 அக்டோபர் 2014.
- "I broke contact with Jayalalithaa". ndtv. பார்த்த நாள் 5 அக்டோபர் 2014.
- "Wielding clout, dangling favours". Nirupama Subramanian. indiatoday. பார்த்த நாள் 5 அக்டோபர் 2014.
- "சசிகலாவைப் பற்றி ஜெயலலிதா சொன்னது".
- http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106252
- http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayalalitha_sentence
- "பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு". தமிழ் இந்து. பார்த்த நாள் பெப்ரவரி 15, 2017.
- "Setback for AIADMK chief Sasikala as 20-year-old case returns to haunt her". இந்துசுதான் டைம்சு. பார்த்த நாள் பெப்ரவரி 14, 2017.
- "The Mannargudi case file: Long list of allegations against Sasikala and her family". நியுசுமினிட். பார்த்த நாள் பெப்ரவரி 14, 2017.
- "ED challenges discharge of Sasikala from FERA case". இந்து. பார்த்த நாள் பெப்ரவரி 14, 2017.
- "சசிகலாவின் முதல் உரை".
- https://www.vikatan.com/news/coverstory/80725-sasikala-convicted-in-da-case--what-will-be-the-next-move-of-governor--opsvssasikala-dacase.html