சசாண்டர்

சசாண்டர் (Cassander) (பண்டைய கிரேக்கம்: Κάσσανδρος Ἀντιπάτρου) (கி மு 350 – 297), ஹெலன்னிய கால மாசிடோனியாவை கி மு 305 முதல் 297 முடிய ஆண்ட கிரேக்க மன்னர் ஆவார். ஆண்டிபாட்டரின் மகனாக இவர் ஆண்டிபாட்ரிட் வம்சத்தை நிறுவியவர்.

சசாண்டர்
சசாண்டரின் உருவம் பொறித்த நாணயங்கள்
மாசிடோனியாவின் மன்னர்
ஆட்சிக்காலம் கி மு 305 – 297
முன்னையவர் நான்காம் அலெக்சாண்டர்
பின்னையவர் நான்காம் பிலிப்பு
வாழ்க்கைத் துணை தெஸ்சலோநெய்க்
வாரிசு
பிலிப்பு
நான்காம் அலெக்சாண்டர்
இரண்டாம் ஆண்டிபாட்டர்
குடும்பம் ஆண்டிபாட்டர் வம்சம்
தந்தை ஆண்டிபாட்டர்.
இறப்பு கி மு 297
சமயம் பண்டைய கிரேக்க சமயம்

துவக்க வரலாறு

கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் பள்ளியில் அலெக்சாண்டர் மற்றும் தாலமி சோத்தர் மற்றும் லிசிமச்சூஸ் ஆகியவர்களுடன் ஒன்றாகப் படித்தவர் சசாண்டர்.[1]

அலெக்சாண்டரின் முக்கியமான ஐந்து படைத்தலைவர்களில் ஒருவர். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் கிரேக்கப் பேரரசின் வாரிசுரிமைப் போரில் சசாண்டர் கிரேக்கப் பேரரசின் மாசிடோனியா பகுதிகளின் மன்னரானார்.[2]

பிந்தைய வரலாறு

ஹெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசின் பகுதிகளை ஐந்தாகப் பிரித்து கொண்டு ஆண்டனர். அலெக்சாண்டரின் படைத்தலைவர்களில் ஒருவரான சசாண்டர் மாசிடோனியாவின் பகுதிகளுக்கு மன்னரானார். செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா, நடு ஆசியா மற்றும் தெற்காசியா பகுதிகளுக்கு மன்னரானார். தாலமி சோத்தர் வட ஆப்பிரிக்கா பகுதிகளின் தாலமைக் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

சசாண்டரின் மகன் நான்காம் பிலிப்பின் மறைவுக்குப் பின் சசாண்டரின் ஆண்டிபாட்ரிக் வம்சம் மறைந்தது.

இதனையும் காண்க

உசாத்துணை

  1. Heckel, Who’s who in the age of Alexander the Great: prosopography of Alexander’s empire, p. 153
  2. Fox, Robin Lane. Alexander the Great, p. 475, 2004 Ed.

மேலதிக வாசிப்பு

  • Diodorus Siculus, Bibliotheca chapters xviii, xix, xx
  • Green, Peter, Alexander the Great and the Hellenistic Age, Weidenfeld & Nicolson, 2007. ISBN 978-0-297-85294-0
  • Plutarch, Parallel Lives, "Demetrius I of Macedon", 18, 31; "Phocion", 31
  • Franca Landucci Gattinoni: L'arte del potere. Vita e opere di Cassandro di Macedonia. Stuttgart 2003. ISBN 3-515-08381-2

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.