சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் (ஆங்கிலம்:Sankarankovil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகராட்சியாகும் . சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

சங்கரன்கோவில்
  முதல் நிலை நகராட்சி  
சங்கரன்கோவில்
இருப்பிடம்: சங்கரன்கோவில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°10′N 77°33′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப
மக்கள் தொகை 70,574
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


52 மீட்டர்கள் (171 ft)

இணையதளம் www.sankarankovil.in

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70, 574 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சங்கரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சங்கரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

திருவிழாக்கள்

சங்கரநயினார் கோவில், சங்கரன்கோவில்
  1. சித்திரை பிரமோட்சவம் (10 நாட்கள்) ஒவ்வொரு ஏப்ரல் மாதமும்.
  2. ஆடி தபசு திருவிழா (12 நாட்கள்) ஒவ்வொரு ஆகத்து மாதமும்.
  3. ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா (10 நாட்கள்) ஒவ்வொரு அக்டோபர் மாதமும்
  4. தெப்பத் திருவிழா - தை கடைசி வெள்ளி ஒவ்வொரு பிப்ரவரி மாதமும்.

வட்டார போக்குவரத்து நிலையம்

சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து நிலையம் 2013ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. சங்கரன்கோவிலின் வட்டார போக்குவரத்து நிலைய எண் : த.நா - 79 (TN - 79) ஆகும்.

கல்வி மாவட்டம்

சங்கரன்கோவில் நகரை தலைமையிடமாகக் கொண்டு கல்வி மாவட்டம் செயல்படும் என்று 2018ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. இதற்கு முன்னர் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் கோட்டம்

சங்கரன்கோவில் நகரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் செயல்படும் என்று 2019ஆம் ஆண்டு அரசு அறிவித்தது.

நகராட்சி

சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சங்கரன்கோவிலின் பிரபலங்கள்

செவ்வாடு

இந்த வட்டத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூர் மற்றும் கீழநீலிதநல்லூர் பகுதியில் வளர்க்கப்படும் செவ்வாடுகள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.[4]

சிறப்புகள்

சந்தை

சங்கரன்கோவிலில் மூன்று சந்தைகள் உள்ளன. அதில் தலையாயது சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும் உள்ளது. மற்றொரு சந்தை உழவர் சந்தை ஆகும். மெயின் சந்தையில் தலா 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடைகள் உள்ளன. உழவர் சந்தையின் வேலை நேரம் : காலை 06 மணி முதல் 10.30 மணி வரை. உழவர் சந்தை சங்கரன்கோவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ளது. மேலும் தென்மாவட்டங்களில் தோவலைக்கு அடுத்தபடியாக பெரிய மலர் சந்தை சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது. இங்கிருந்து மலர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வங்கிகள்

  • பாரத ஸ்டேட் வங்கி
  • கரூர் வைஸ்யா வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • ஆக்ஸிஸ் வங்கி
  • எச்.டி.எப்.சி வங்கி
  • சின்டிகேட் வங்கி
  • எக்விடாஸ் வங்கி
  • உஜ்ஜிவன் வங்கி
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • ஸ்டேட் வங்கி ஆப் திருவாங்கூர்
  • பாண்டியன் கிராம வங்கி
  • கனரா வங்கி
  • ஐடிபிஐ வங்கி
  • ஆந்திரா வங்கி
  • கார்ப்பரேஷன் வங்கி
  • இந்தியன் வங்கி
  • தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி
  • சிட்டி யூனியன் வங்கி
  • கும்பகோணம் பரஸ்பர நிதி பி.லிட்
  • போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட்

விரைவில் திறக்கப்படும் வங்கிகள்

  • கர்நாடகா வங்கி
  • கோடக் மகேந்திரா வங்கி
  • பாங்க் ஆப் பரோடா
  • லட்சுமி விலாஸ் வங்கி

இரயில் நிலையம்

சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இர‌யி‌ல்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.

புதிய இரயில் பாதை

  1. சங்கரன்கோவில் முதல் திருநெல்வேலி வரை
  2. சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
  3. சங்கரன்கோவில் முதல் ஈரோடு வரை
  4. சங்கரன்கோவில் முதல் சென்னை வரை (மற்றுமொரு பாதை)

கல்வி நிறுவனங்கள்

  • ஏ. வி. கே இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
  • ஏ.வி.கே மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • வேல்ஸ் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ), சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • சிவா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • இராயல் சிட்டி மார்டன் ஆங்கிலப் பள்ளி, சங்கரன்கோவில்.
  • இராமச்சந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • நகராட்சி (முனிசிபல்) பள்ளி (மொத்தம் - 15 +)
  • செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • 36 கிராம சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • 24 மனை தெலுங்கு செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • சி.நா.ராமசாமி (எஸ். என். ஆர்) மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • செவென்த்டே அட்வன்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி , சங்கரன்கோவில்.
  • அன்னை தெரசா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • ஜெய மாதா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • சங்கரநாராயணா பிளே பள்ளி, சங்கரன்கோவில்.
  • சங்கரநாராயணர் ஆரம்ப பாடசாலை, சங்கரன்கோவில்.
  • கோமதி சங்கர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சங்கரன்கோவில்.
  • இமாம் கஸாலி (ரஹ்) ஓரியண்டல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்-சங்கரன்கோவில்.
  • வணிக வைசிய சங்க மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
  • வணிக வைசிய சங்க உயர் நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.

பேருந்து நிலையம்

சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : அண்ணா பேருந்து நிலையம். புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம். தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து வழித்தடம்

சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், குற்றாலம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆரியங்காவு மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாடு SETC அதிவிரைவு பேருந்து சங்கரன்கோவிலில் இருந்து சென்னை, பெங்களூர், மதுரை, கொடைக்கானல், மூணாறு, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் பல ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  4. உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’ தி இந்து தமிழ் நவம்பர் 6 2016

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்



    வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:தென்காசி மாவட்டம்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.