கேது (நவக்கிரகம்)
கேது அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகக் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், உடல் இரண்டாக பிளவுபட்டது.
கேது | |
---|---|
Ketu:Tail of Demon Snake, sculpture from the British Museum | |
அதிபதி | தென் சந்திரக் கணு |
வகை | நவக்கிரகம், அசுரன் |
துணை | சித்திரலேகா |
அமிர்தம் குடித்த தலையுடன் கூடிய பகுதி கேதுவாகவும், முண்டத்துடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.
தேய்பிறையின் கணுவாகும். இது அசுரனின் தலை வெட்டப்பட்ட பின்னான இராகுவின் உடற்பகுதி. இந்து தொன்மவியலில் நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.