கும்பு

கும்பு (Khumbu) (இது எவெரெசுட்டுப் பகுதி என்றும் அழைக்கப்படும்)[1] என்பது இமயமலைப்பகுதியில் எவரெசுட்டு முகடும் மலையும் இருக்கும் நேப்பாளத்தின் வடகிழக்குப் பகுதி ஆகும். இது நேப்பாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தின் ஒரு பகுதி. இது சாகர்மாதா இயற்கைப் புரவகத்தின் ஒரு பகுதியும் ஆகும்.[2] கும்புப் பகுதி இமயமலைப்பகுதியில் செர்ப்பா இன மக்கள் வாழும் முக்கியமான மூன்று பகுதிகளில் துலுங்கு அல்லது கம்பு என்னும் பகுதியாகும். மற்ற இரண்டு பகுதிகள் சோலு, பரக்கு ஆகியவை ஆகும். இந்தக் கும்புப் பகுதியில் நாமிச்சே பசார் (இதன் பழைய பெயர் பெரிய காடு என்று பொருள்படும் "நாவுச்சே" என்பதாகும்) என்னும் ஊரும் தாமே, குமுஞ்சுங்கு, பங்குபுச்சே, பெரிச்சே, குண்டே ஆகிய ஊர்களும் அடங்கும். தெங்குபுச்சே என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்தத்துறவியர் மடமும் கும்புப் பகுதியில் அடங்கும்.[3]

கும்பிலா மலை குமுஞ்சுங்கு, குண்டே ஆகிய ஊர்களுக்கு மேல் தோன்றுமாறு எழுந்து நிற்கின்றது. எவரெசுட்டு மலையும், இலோட்ஃசே முகடும் (Lhotse), அமா தபலாம் (Ama Dablam) மலையும் பின்புலத்தில் தெரிகின்றது.
கும்புப் பையாறு அல்லது பனியாறு (Glacier)
கும்புப்பகுதியின் வரைபடம்

கும்பின் உயரவலயம் 3,300 மீட்டர் (11,000 அடி) முதல் 8,848 மீட்டர் (29,029 அடி) ஆகிய எவரெசுட்டு உச்சி வரை அமையும். [4] கும்புப்பகுதியானது சாகர்மாதா நாட்டுப் புரவகமும் (மாஞ்சு எனப்படும் ஊருக்கு வடக்கே உள்ள பகுதி), சாகர்மாதா புரவகத்துகத்தின் இடையரண் பகுதியாகிய (buffer zone) இலுக்குலாவுக்கும் மாஞ்சு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியும் அடங்கும்.[2]

கும்பு என்னும் பனிப்பையாறு (Glacier) கடைசிப் பெரிய பனியூழியின் விளைவால் ~500,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படுகின்றது,

இலோன்லி பிளானட்டு (Lonely Planet) என்னும் சுற்றுலா பதிப்பகம் கும்புப் பகுதியை உலகின் ஆறாவது மிகச்சிறந்த இடம் எனக் குறிக்கின்றது.[5]

கும்புப்பகுதியில் உள்ள ஊர்கள்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Khumbu Everest region
  2. Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 edição; pp 84-141; Lonely Planet; ISBN 978-1-74104-188-0.
  3. Bonington, Chris; Everest, The Hard Way; (1977); pp 72-75; Arrow Books editions; ISBN 0-09-915940-6.
  4. Boukreev, Anatoli; The Climb;(1988); St. Martin's edition; ISBN 0-312-96533-8.
  5. http://www.lonelyplanet.com/best-in-travel/regions/06-khumbu?detail=1

வெளியிணைப்புகள்

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Khumbu

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.