பஃகுடிங்கு
பஃகுடிங்கு (Phakding) ஊர் நேபாளத்தில் கும்புப்பகுதியில் இருக்கின்றது. இது இலுக்குலா ஊருக்கு வடக்கேயும், மாஞ்சோ ஊருக்குத் தெற்கேயும் 2,160 மீட்டர் உயரத்தில் தூதுகோசி ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1][2][3] இவ்வூர் 1979 ஆம் ஆண்டுமுதல் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களத்தில் ஒன்றாக விளங்குகின்றது.

பஃகுடிங்கில் இருந்து இலுக்குலா நோக்கிச் செல்லும் கரட்டுப்பாதை.
இலுக்குலாவில் தொடங்கி வடக்கே செல்லும் கரட்டுப்பாதையில் பஃகுடிங்கே பெரும்பாலும் முதலில் நிற்கும் இடமாக இருக்கும். இப்பாதை எவரெசுட்டு அடிவார முகாமுக்குச் செல்லும் முக்கிய பாதையாகும்.[2]
இவ்வூரின் முக்கியப் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் மலையேறு பயணிகளுக்கு தங்குமிடம் உணவகம் ஆகியவற்றின்வழி ஈட்டுவதே.[2]
இதனையும் பார்க்க
- எவரெசுட்டு அடிவார முகாம்
குறிப்புகள்
![]() |
விக்கிப்பயணத்தில் பஃகுடிங்கு என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
- Nepal Map Publisher Ltd.& ISBN 978-9937-8062-1-3;
- Bradley, Mayhew; "Trekking in the Nepal Himalaya"; (2009); 9 ed.; p. 94 (map)+ pp 103-104; Lonely Planet; ISBN 9781741041880
- Bezruchka Stephen; "Trekking in the Nepal: a traveler’s guide"; The Mountaineers ed.; Seattle; (2004); page 220; ISBN 0-89886-535-2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.