குமுஞ்சுங்கு

குமுஞ்சுங்கு (Khumjung; நேபாளி: खुम्जुंग) நேபாளத்தில் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் சோலுகும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது சாகர்மாதா நாட்டுப் புரவகத்தின் உள்ளே அமைந்துள்ளது. இவ்வூர் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட ஓரூர். கும்பிலா மலையின் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்தில் இருந்து 3,970 மீ உயரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது.

குமுஞ்சுங்கு

Khumjung Xizang

खुम्जुङ
நேபாள ஊராட்சி அமைப்பு
குமுஞ்சுங்கு, குண்டே ஆகிய இரண்டு ஊர்களுக்கும் மேலே உயரமாக கும்பிலா மலை எழுச்சியுடன் காட்சி தருகின்றது. பின்புலத்தில் எவரெசுட்டு மலையும் இலோட்ஃசே முகடும், அமா தபலாம் மலையும் தெரிகின்றது.
நாடுநேபாளம்
நேபாள வலயம்சாகர்மாதா வலயம்
நேபாள மாவட்டம்சோலுகும்பு மாவட்டம்
மக்கள்தொகை (1991)
  மொத்தம்1,809
நேர வலயம்நேபாள நேரம் (ஒசநே+5:45)
தொலைபேசி குறியீடு038

குமுஞ்சுங்கு ஊரில் உள்ள ஒரு துறவியர் மடத்தில் இயேட்டி என்னும் வியப்புறும் மாந்தனைப்போன்ற, ஆனால் மிக உயரமான ஓர் உயிரினத்தின் முடியுடன் உடைய மண்டை யோடு எனக்கருதப்படும் ஒன்றை வைத்திருக்கின்றார்கள். ஆனால் அப்படியான ஓர் உயிரினம் இருப்பதையோ இருந்ததையோ யாரும் தற்கால முறைப்படி நிறுவவில்லை. இந்த ஊரில் தற்கால தொலைதொடர்பு வசதிகளும் கம்பியில்லா தொலைபேசி, இணைய வசதிகளும், நிலவழி தொலைபேசி வசதிகளும் கொண்டுள்ளது.

நேபாள ஊராட்சி அமைப்புக் குழுவின் குமுஞ்சுங்கு ஊராட்சிக் குழுவின் தலைமையகம் இங்குதான் உள்ளது. இந்த ஊராட்சி அமைப்பின் கீழ் குண்டே, குமுஞ்சுங்கு, தெங்குபுச்சே, பங்குபுச்சே, பெரிச்சே, தோலே, சார்ச்சுங்கு, மாச்செர்மோ, இலபோச்சே, திங்குபுச்சே, கோக்கியோ ஆகியன அடங்கும். 1991 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின்படி 433 வீடுகளில் 1809 பேர் இவ்வூரில் வாழ்கின்றனர்[1]

எடுமண்டு இல்லரி அவர்கள் 1961 இல் நிறுவிய இமாலய வைப்பகம் கட்டிய குமுஞ்சுங்குப் பள்ளி இங்குள்ளது. முதலில் இரண்டே வகுப்பறையுடன் கட்டப்பட்ட இப்பள்ளியில் இப்பொழுது மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. 350 மாணவர்கள் படிக்கின்றார்கள்.

படக்காட்சி

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Nepal Census 2001". Nepal's Village Development Committees. Digital Himalaya. பார்த்த நாள் 2014-10-07.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.