இலபோச்சே

இலபோச்சே அல்லது இலபூச்சே (Lobuche அல்லது Lobuje) என்னும் ஊர் நேபாளத்த்தின் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் எவரெசுட்டு மலைப்பகுதியில் உள்ளது. எவரெசுட்டு மலையடிவார முகாமுக்குத் தென்கிழக்குப் பாதை வழியாக ஏறிச்செல்பவர்கள் கடைசியாக இரவில் தங்க விடுதிவசதிகள் உள்ள ஊர்களில் ஒன்று. இதைவிட்டால் கோரக்கு செப்பு (Gorak Shep) என்னும் ஊரே கடைசியாக விடுதியில் தங்கக்கூடிய ஊர். இங்கிருந்து காலா பத்தர் என்னும் அருகில் உள்ள முகட்டுக்குச்ச்செல்லலாம். இதன் உயரம் 5,545 மீ (18, 192 அடி). இங்கிருந்து எவெரெசுட்டு முகட்டின் அரிய காட்சியைக் காணலாம்.[1]. எவரெசுட்டின் மலையமைப்பின் வடிவால், அதன் அடிவார முகாமில் இருந்து பார்த்தால் முழு முகடும் தெரியாது.

இலபோச்சே
Lobuche

लोबुचे
நாடுநேபாளம்
நேபாள வலயம்சாகர்மாதா
நேபாள மாவட்டம்சோலுகும்பு
ஏற்றம்4,940
நேர வலயம்நேபாள நேரம் (ஒசநே+5:45)

இலபோச்சே கடல்மட்டத்தில் இருந்து 4,940 மீ (16,210 அடி) உயரத்தில் உள்ளது. இவ்வூர் நேபாளத்தின் தலைநகராகிய காட்டுமாண்டுவில் இருந்து கிழக்கே 150 கி.மீ (93 மைல்) தொலைவில் உள்ளது. [2][3][4] இலபோச்சே என்னும் பெயர் இப்பகுதியில் உள்ள ஆளா முகடுகளுக்கும் வழங்குகின்றார்கள்: கிழக்கேயுள்ள இலபோச்சே, மேற்கேயுள்ள இலபோச்சே, வடக்கே திபெத்தில் உள்ள இலபோச்சே காங்கு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் மாதம் நூற்றுக்கணக்கான செர்ப்பாக்களும், சுமைதூக்கியாட்களும் இவ்வழியாக எவரெசுட்டு அடிவார முகாமுக்குச் செல்வார்கள். மேமாதத்தில் எவரெசுட்டு முகட்டை ஏறுவதற்குத்தேவையான பயன்பொருட்களை கவரிமான் (யாக்கு என்னும் ஆவினம்) மீதும் பிறவகையாகவும் ஏற்றிச் செல்வார்கள்.

இங்குள்ள விடுதிகள் மிகவும் எளிமையான வசதிகளே கொண்டுள்ளன. அண்மைய காலங்களில் ஆக்சிசன் வசதிகளும், கம்பியில்லா இணைய வசதிகளும் தொலைதொடர்பு வசதிகளும் ஏற்பட்டுள்ளன.

படக்காட்சியகம்

இலபோச்சேயில் இருந்து நூப்ஃசே தெரியும் காட்சி

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.