தாமே
தாமே ஊரும் அதனருகில் இருக்கும் மேல் தாமே எனப்படும் தாமேதெங்கும் நேபாளத்தில் உள்ள சோலுகும்புப்பகுதியில் இருக்கும் நாமிச்சே பசார் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சிறு செர்ப்பா ஊர்கள். திபெத்துக்கும், இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நடந்த உப்பு வணிக வழிப்பாதையில் ஆண்டுமுழுவதும் இயங்கிக்கொண்டிருந்த ஊர். புகழ்பெற்ற செர்ப்பா மலையேறிகளின் பிறப்பிடம். எவரெசுட்டு மலையை 21 முறை ஏறிய அப்பா செர்ப்பா என்பவரின் பிறந்தவூர். முதன்முதலாக எவரெசுட்டு முகட்டை சர் எடுமண்டு இல்லரியுடன் ஏறி எட்டிய தென்சிங்கு நோர்கே அவர்கள் சிறு வயதில் வளர்ந்த இடம். இங்கே இலாவுடோ இலாமா என்னும் தலைமை இலாமாவாகிய சோப்பா இரின்புச்சே இலாமாவின் பிறந்தவூர். தாமே துறவியர் மடமே கும்புப்பகுதியில் உள்ளா ஆகப்பழமையான மடம். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் மணி இரிம்து விழாவும் புகழ்பெற்றது.
தாமே थामे | |
---|---|
ஊர் | |
தூவிப்பனிவீழ்வில் தாமே | |
Country | நேபாளம் |
வலயம் | சாகர்மாதா வலயம் |
மாவட்டம் | சோலுகும்பு |
நேர வலயம் | Nepal Time (ஒசநே+5:45) |