குத்து (திரைப்படம்)
குத்து (Kuththu) என்பது 2004ஆம் ஆண்டு எ. வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[1] இதில் சிலம்பரசன், ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1] இது ரம்யா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் நித்தின் குமார் ரெட்டி, நேகா பாம்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த தில் திரைப்படத்தின் மறுவுருவாக்கமாகும்.[3]
குத்து (திரைப்படம்) | |
---|---|
![]() | |
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | கோ சி என் சந்திரசேகர் எஸ் துரைராஜ் |
கதை | எ. வெங்கடேஷ் வி. வி. விநாயக் வி. பிரபாகர் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | சிலம்பரசன் ரம்யா ரம்யா கிருஷ்ணன் கலாபவன் மணி கருணாஸ் கோட்டா சீனிவாச ராவ் விஜயகுமார் |
ஒளிப்பதிவு | எ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | வி டி விஜயன் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2004 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
கதாநாயகன் சிலம்பரசன், கதாநாயகியான ரம்யாவை காதலிப்பதும், அந்தக் காதலுக்கு ரம்யாவின் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்வதுமே இத்திரைப்படத்தின் கதையாகும்.[1]
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
சிலம்பரசன் | குரு |
ரம்யா | அஞ்சலி |
லிவிங்ஸ்டன் | கல்லூரி முதல்வர் |
கலாபவன் மணி | அஞ்சலியின் தந்தை |
கருணாஸ் | குருவின் நண்பன் |
கோட்டா சீனிவாச ராவ் | அஞ்சலியின் தாத்தா |
ஐசுவரியா | அஞ்சலியின் தாய் |
ரம்யா கிருஷ்ணன் | சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
Untitled |
---|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | அசானா அசானா | சுபீபு கான், மகாலட்சுமி ஐயர் | சினேகன் |
2 | குத்து குத்து | சங்கர் மகாதேவன் | பா. விசய் |
3 | பச்சைக் கிளி பச்சைக் கிளி | சிறீகாந்து தேவா | பழனிபாரதி |
4 | நிபுணா நிபுணா | சாதனா சருகம் | கலைக்குமார் |
5 | போட்டுத் தாக்கு | சிலம்பரசன், சே. கே. வி. உரோசினி | வாலி |
6 | சாப்பிட வாடா | மாலதி, உதித்து நாராயண் | கலைக்குமார் |
7 | என் நிலவு | பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி | தாமரை |
8 | எனைத் தீண்டி விட்டாய் | பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி | தாமரை |
மேற்கோள்கள்
- "குத்து-Kuthu". கூடல். பார்த்த நாள் 2015 சூலை 19.
- "A dream-come-true role: Ramya". Sify Movies. பார்த்த நாள் 2015 சூலை 19.
- "Kuthu". Sify Movies. பார்த்த நாள் 2015 சூலை 19.
- "Kuththu (2004)". Raaga. பார்த்த நாள் 2015 சூலை 19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.