கிசோர் (படத்தொகுப்பாளர்)

கிஷோர் (Kishore Te, 24 மார்ச் 1978 - 6 மார்ச் 2015) தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர்.[1][2] தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.[3]

கிஷோர்
Kishore Te
பிறப்புமார்ச்சு 24, 1978(1978-03-24)
வளவனூர், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு6 மார்ச்சு 2015(2015-03-06) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2009-2015

பணி

தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.

இறப்பு

வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது.[4] அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.[5][6]

தொகுத்த திரைப்படங்கள்

ஆண்டுபடம்விருது
2009ஈரம்
2010ஆனந்தபுரத்து வீடு
2011ஆடுகளம்தேசிய விருது
2011பயணம்
2011ஆடு புலி
2011மாப்பிள்ளை
2011உதயன்
2011காஞ்சனா
2011180
2011எங்கேயும் எப்போதும்
2012தோனி
2012ஆரோகணம்
2012அம்மாவின் கைப்பேசி
2013பரதேசி
2013எதிர் நீச்சல்
2013உதயம் என்.எச்4
2013மதயானைக் கூட்டம்
2014வெற்றிச் செல்வன்
2014நெடுஞ்சாலை
2014புலிவால்
2014வானவராயன் வல்லவராயன்
2014உன் சமையலறையில்
2015காஞ்சனா 2
2015காக்கா முட்டை
2015விசாரணை

மேற்கோள்கள்

  1. "Kishore Te - Facebook". facebook.com. பார்த்த நாள் 6 மார்ச் 2015.
  2. "Review: Eeram is brilliant". Rediff (11 September 2009). பார்த்த நாள் 6 மார்ச் 2015.
  3. "Editor Kishore - Tamil Cinema Editor Interview - Editor Kishore - Jayendra - 180 - Aadukalam - Vetri Maaran - Behindwoods.com". behindwoods.com. பார்த்த நாள் 6 March 2015.
  4. "தினமலர்"
  5. "தினத்தந்தி"
  6. "tamil.filmibeat.com"

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.