கியூரியம்(III) புளோரைடு
கியூரியம்(III) புளோரைடு (Curium(III) fluoride) என்பது CmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கியூரியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் கியூரியம்(III) புளோரைடு வெண்மை நிறங்கொண்டு கிட்டத்தட்டக் கரையாத ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. இலந்தனம் முப்புளோரைடு (LaF3) சேர்மத்தின் படிகக் கட்டமைப்பையே கியூரியம் டிரைபுளோரைடும் ஏற்றுள்ளது. வலிமையற்ற அமில Cm(III) கரைசலில் புளோரைடு அயனிகளைச் சேர்க்கும்போது நீரேற்றாக இப்புளோரைடு வீழ்படிவாகிறது. மாறாக கியூரியம் ஐதராக்சைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்தும் தொகுப்பு முறையில் கியூரியம் டிரைபுளோரைடு தயாரிக்கலாம். பின்னர் நீர் நீக்க வினையினால் அல்லது ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் நீரிலி வடிவ கியூரியம் டிரைபுளோரைடு தயாரிக்கலாம்.
![]() படிகக் கட்டமைப்பு | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கியூரியம்(III) புளோரைடு | |
வேறு பெயர்கள்
கியூரியம் டிரைபுளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13708-79-7 | |
ChemSpider | 57569004 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
CmF3 | |
தோற்றம் | Colorless solid[1] |
உருகுநிலை | |
~10 மி.கி/லி | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24 |
புறவெளித் தொகுதி | P3c1, No. 165[2] |
Lattice constant | a = 0.7012 நானோமீட்டர், c = 0.7198 நானோமீட்டர் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1660 கி.யூ/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
121 யூ/மோல்·K[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
மேற்கோள்கள்
- Nave, S. E.; Haire, R. G.; Huray, Paul G. (1983). "Magnetic properties of actinide elements having the 5f6 and 5f7 electronic configurations". Physical Review B 28 (5): 2317. doi:10.1103/PhysRevB.28.2317.