காந்தரூபன்

மேஜர் காந்தரூபன் (செப்டம்பர் 10, 1971 - ஜூலை 10, 1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக் கொண்ட யோகராசா கோணேஸ்வரன் தமிழ் விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

காந்தரூபன்

கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1][2].

இவரது வேண்டுகோளுக்கு அமைய காந்தரூபன் அறிவுச்சோலை என்ற சிறுவர் இல்லம் 1993 நவம்பர் 13ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் மேஜர் காந்தரூபன் நினைவாக வருடம்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன[3].

முதாலாவது கடற்கரும்புலிகளில் கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் மேஜர் காந்தரூபனும் ஒருவராவார். இவர்கள் மறைந்த நாளின் 25 ஆம் ஆண்டு தினம் 10 சூலை 2015 அன்று நினைவுக்கூறப்பட்டது[4].

மேற்கோள்கள்

  1. "தமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல்". மூலம்: எரிமலை (அக்டோபர் 22, 2006), நேர்கண்டவர்கள்: எரிமலை சஞ்சிகை குழுமம். Tamilcanadian.com. பார்த்த நாள் 1 ஆகத்து 2015.
  2. "முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள்". உலகத் தமிழர் இணையம். 10 சூலை 2012. http://www.worldtamils.com/?p=33139. பார்த்த நாள்: 1 ஆகத்து 2015.
  3. தம்பியன் (26 ஏப்ரல் 2010). "பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் ஏற்பாட்டில் காந்தரூபன் நினைவாக போட்டிகள் இடம்பெற்றது". வன்னி ஆன்லைன்.காம். http://www.vannionline.com/2010/04/blog-post_2055.html. பார்த்த நாள்: 15 மார்ச் 2015.
  4. "முதாலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள்". http://ttnnews.com. 10 சூலை 2015. http://ttnnews.com/முதாலாவது-கடற்கரும்புலி/. பார்த்த நாள்: 26 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.