கலிபோர்னியா செம்மரம்
கலிபோர்னியா செம்மரம் (அறியவில் பெயர்: செக்கோயா செம்பெர்வைரன்சு, ஆங்கிலத்தில் Sequoia sempervirens) என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 1200 - 1800ஆண்டுகள் வரையோ அல்லது அதற்கு மேலே கூட வாழும். [1] அதிக (பெரும) அளவாக 115 மீட்டர் உயரமும், 8 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
கலிபோர்னியா செம்மரம் செக்குவோயா செம்பர்வைரன்சு | |
---|---|
![]() | |
S. sempervirens, Big Basin Redwoods State Park, California | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | Pinophyta |
வகுப்பு: | Pinopsida |
வரிசை: | Pinales |
குடும்பம்: | Cupressaceae |
பேரினம்: | Sequoia |
இனம்: | S. sempervirens |
இருசொற் பெயரீடு | |
Sequoia sempervirens (D. Don) Endl. | |

Sequoia sempervirens
குறிப்புகள்
- இவ் இனத்திலேயே உயரமான மரம் ஐப்பரியான் என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
- 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
மேற்கோள்கள்
- "Sequoia gigantea is of an ancient and distinguished family". Nps.gov (2007-02-02). பார்த்த நாள் 2012-08-07.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.