கபிலர்

காலப் பாதையில் கபிலர் என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை:

அடைமொழியிடன் கூடிய கபிலர்

இவற்றையும் காண்க.

இவர் அந்தணர் வேள் பாரியின் உளங் கலந்த நண்பர் துறவு வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்தவர். பாண்டி நாட்டுத் திருவாதவூரில் பிறந்தவர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என (புறம்,126) மாறேக்கத்து நப்பசலையார் இவரைப் போற்றுவர். இவர் அருளியனவாகத் தொகை நூற்களுள் காணப்படுவன 278 செய்யுட்கள். குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் செய்வதில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர், ஆதலால் இவருடைய செய்யுட்கள் பலவும் அந்தணச் செய்யுட்களாகவே காணப்படும்.

கபில முனிவர், தொல்கபிலர், கபில தேவ நாயனார் ஆகியோர் வேறு.  இவர் வேறு ஆரிய அரசன் பிருகத்தத்தனுக்குத் தமிழினிமையை எடுத்துக் கூறமாற்றலால் குறிஞ்சிப் பாட்டைச் செய்தவர்இவர். 
இவராற் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதவன் சேரமான் மாந்தரஞ சேரல் இரு மலையன் விச்சிகோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள், பாரி என் போராவார்.  இவர்களுள் பாரியின் பண்பைப் பற்றி இவர் பாடிய பாடல்களே மிகுதியானவை,அவை இவரது சால்பையும், பாரி வள்ளலது சால்பு மிகுதியையும் தமிழகத்தே என்றும் நிலைக்குமாறு நிலைபெறச் செய்தவை ஆகும்.  இவருடைய வரலாறு மிகவும் விரிவானது.  

பாரிக்குப் பின் பாரி மகளிர்க்குத்தாமே தந்தையெனும் பொறுப்பினை ஏற்று அவரை நல்ல வாழ்வில் அமைக்க இவரடைந்த துயரங்கள் பல முடிவில், அவரை பார்ப்பார் பால் அடைக்கலமாக ஒப்பித்து விட்டுத் தாமும் வடக்கிருந்து உயிர்நீத்துத் தம் நண்பனான பாரியுடன் சென்று சேர்ந்தவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.