கபிலர் (இன்னா நாற்பது பாடியவர்)
இன்னாநாற்பது பாடிய கபிலர் சங்க காலக் கபிலருக்கு இரண்டொரு நூற்றாண்டு பிற்பட்டவர். பாடலை இவர் ‘கவி’ எனக் குறிப்பிடுவது [1] ஒன்றே இவரது காலம் பிற்பட்டது என்பதைக் காட்டப் போதுமானது.
இந்த நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் முக்கண்ணான், பனைக்கொடியான், சக்கரத்தான், சத்தியான் (வேலாயுதம்) ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
இன்னா என்பது துன்பம். ஒவ்வொரு பாடலிலும் துன்பம் தரும் பொருள்கள் நான்கு அடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில பாடல் எண்ணுடன் இங்கு தரப்பட்டுள்ளன.
அன்பில்லா மனைவி வனப்பு, 1 |
உடம்பாடு இல்லாத மனைவி தோள், 11 |
விரும்பிச் சூது ஆடுதல், 25 |
அடிக்குறிப்பு
- பாடல் 39