கதைப்பாடல்
கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும். கதைப் பாடல் என்பது நாட்டாறியல் பாடல்களில் ஒருவகையாகும். இவை பாடல்களால் ஒரு கதையினை கூறுபவையாக அமைந்துள்ளன. [1]
பாடல் வகைகள் |
---|
வகைகள்
- புராணம் இதிகாசம் சார்ந்த தெய்வ கதைப் பாடல்கள்
- வரலாற்றுக் கதைப் பாடல்கள்
- சமூகக் கதைப் பாடல்கள் [2]
நா. வானமாமலை கதைபாடலை நான்கு வகையாக குறிப்பிட்டு, நாலாவதாக கிராம தேவதைகளின் கதைப்பாடல்கள் என்பதையும் இணைத்துக் கொள்கிறார்.
வரலாறு கதைப்பாடல்
கொள்ளையர் கதைப்பாடல் என்பது கதைப்பாடல்களில் கொள்ளையர்களை கதைதலைவனாக கொண்ட பாடல்கள். இவை மக்களுக்கு வீரமான கொள்ளையர்கள் கதையை விவரித்தன. பெரிய பண்ணையார்கள், செல்வந்தர்களிடம் கொள்ளைடித்து மக்களுக்கு நன்மை செய்த மனிதர்களை இப்பாடல்கள் புகழ்ந்தன.
- ஜம்புலிங்கம் கதைப்பாடல்
- சந்தனத்தேவன் கதைப்பாடல்
- காசித்தேவன் கதைப்பாடல்
- கவட்டைவில் கருவாயன் கதைப்பாடல்
- கதிர்வேல் படையாச்சி கதைப்பாடல்
- சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கர் கதைப்பாடல்
- மணிக்குறவன் கதைப்பாடல் [3]
- ஆத்துக்காட்டுத் தங்கையா கதைப்பாடல்
- சன்னாசித் தேவர் கதைப்பாடல்
- குமரி லட்சுமணத் தேவர் கதைப்பாடல்
- சீவலப்பேரிப் பாண்டி கதைப்பாடல்
- மலையூர் மம்பட்டியான் கதைப்பாடல்
- அருவாவேலு கதைப்பாடல்
- கொடுக்கூர் ஆறுமுகம் கதைப்பாடல்
- தீச்சட்டி கோவிந்தன் கதைப்பாடல்
கொலைச் சிந்து
நாட்டார் கதைப்பாடல்களில் கொடுரமான கொலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்களை கொலைச் சிந்து வகையில் சேர்க்கின்றனர். தகாதப் புணர்ச்சி, கள்ளக் காதல், குடும்ப வன்முறை போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகள் கதைகளமாக கொள்ளப்படுகின்றன
சில கதைப்பாடல்கள்
- அண்ணமார் சாமி கதை
- இரணியாசுரன் கதை
- ஐவர் ராசாக்கள் கதை
- கள்ளழகர் கதை
- காத்தவராயன் கதை
- கெளதல் மாடன் கதை
- கோவிலன்-கர்ணகி கதை
- சதமுக இராவணன் கதை
திரைப்படங்கள்
எ.கா:
- ஆக்காண்டி ஆக்காண்டி
- எங்கெங்கே முட்டைவைத்தாய்
- கல்லைப்பிளந்து கடலருகே
- முட்டை வைத்தேன்
- வைத்ததுவோ மூன்று முட்டை
- பெரித்ததுவோ இரண்டு குஞ்சு
- மூத்த குஞ்சுக்கிரை தேடி
- மூனு மலை சுற்றி
- வந்தேன்
- இளைய குஞ்சுக்கிரை தேடி
- ஏழு மலை சுற்றி வந்தேன்
- மாயக் குறவன்
- வழிமறித்துக் கண்ணி குற்ற
- காலிரண்டும் பட்டுச்
- சிறகிரண்டும் மாரடிக்க
- நான் அழுத கண்ணீரும்
- என் குஞ்சழுத கண்ணீரும்
- வாய்க்கால் நிரம்பி
- வழிப்போக்கர்
- கால்கழுவ
- இஞ்சிக்குப் பாய்ஞ்சி
- இலாமிச்சை வேரூன்ற
- நான் அழுத கண்ணீரும்
- என் குஞ்சழுத கண்ணீரும்.
இவற்றையும் காண்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
- [http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611312.htm 3.2 நாட்டுப்புற இலக்கியம்- தமிழாய்வு தளம்]
- இன்றைய சினிமா நாளை மறக்கப்படலாம்; ஆனால் எழுத்து காலம் கடந்தும் வாழும்!-எழுத்தாளர் கே. ஜீவபாரதி நேர்காணல்! நக்கீரன்
- http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/kolaiccintu.htm