நா. வானமாமலை

நா. வானமாமலை (1917 - 1980), திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் . தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது 22 நூல்கள் 2008-09 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது.[1]

ஆக்கங்கள்

கதைத் தொகுப்புகள்

  • ஐவர் ராசாக்கள் கதை
  • கட்டபொம்மு கூத்து
  • கட்ட பொம்மன் கதைப்பாடல்
  • காத்தவராயன் கதைப்பாடல்
  • கான்சாகிபு சண்டை
  • முத்துப்பட்டன் கதை
  • வீணாதிவீணன் கதை

நூல்கள்

  • தமிழர் வரலாறும் பண்பாடும்
  • தமிழ்நாட்டில் ஜாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
  • வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
  • தமிழர் பண்பாடும் தத்துவமும்
  • பழங்கதைகளும் பழமொழிகளும்

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகள்

இவரது நாட்டுடையாக்கப்பட்டுள்ள 22 நூல்களின் பட்டியல்[2]:

  1. இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
  2. இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
  3. உயிரின் தோற்றம்
  4. உரைநடை வளர்ச்சி
  5. ஐவர் ராசாக்கள் கதை
  6. கட்டபொம்மு கூத்து
  7. காத்தவராயன் கதைப்பாடல்
  8. கான்சாகிபு சண்டை
  9. தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
  10. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
  11. தமிழர் நாட்டுப்பாடல்கள்
  12. தமிழர் பண்பாடும் தத்துவமும்
  13. தமிழர் வரலாறும் பண்பாடும்
  14. பழங்கதைகளும், பழமொழிகளும்
  15. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
  16. மக்களும் மரபுகளும்
  17. மார்க்சீய அழகியல்
  18. மார்க்சீய சமூக இயல் கொள்கை
  19. முத்துப்பட்டன் கதை
  20. வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
  21. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
  22. Studies in Tamil Folk Literature

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.