எடை இழப்பு

எடை இழப்பு (Weight loss), மருத்துவம், உடல்நலம் அல்லது உடல் நலத்தகுதி போன்ற துறைகள் சார்பில், மொத்த உடல் திண்மையில் ஏற்படும் இழப்பாகும். இது நீர்ம இழப்பினாலோ உடல் கொழுப்பு இழப்பினாலோ கொழுப்பிழையம் அல்லது எலும்புக் கனிமச் சேமிப்புகள், தசைத்திசுக்கள் மற்றும் பிற இழையங்களின் இழப்பினாலோ ஏற்படலாம். இந்த இழப்பு உள்ளிருக்கும் நோய் காரணமாக அறியாமலே ஏற்படலாம்; அல்லது தனது உடற் பருமனைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளால் ளள தெரிந்தும் ஏற்படலாம்.

எடை இழப்பு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-9783.21

தெரியாமல் ஏற்படும் எடை இழப்பு

புற்றுநோய், எய்ட்சு போன்ற மிகத் தீவிரமான நோய்கள் உட்பட பல நோய்களாலும் நிலைகளாலும் எடை இழப்பு ஒருவருக்குத் தெரியாமலே ஏற்படலாம்.

முதலாம் வகை நீரிழிவு நோய் சிகிட்சையில் சரியாக கையாளப்படவிட்டால் குருதியோட்டத்தில் கூடுதலான சர்க்கரைச்சத்தும் குறைவான இன்சுலினும் இருக்கும். இது டிரைகிளிசரைடுகளை கொழுப்பிழையங்களிலிருந்து வெளியேற்றவும் தசைத்திசுக்களில் உள்ள அமினோ அமிலங்களை உடைக்கவும் தூண்டுகிறது. இதனால் கொழுப்பும் தசைத்திசுக்களும் ஒரே நேரத்தில் குறைய உடல் எடையில் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. மேலும் கொழுப்பு, தசைத்திசுக்களின் இழப்பன்றி நீரிழிவு நோய், சில மருந்துகள், சரியாக நீர்த்த உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் நீர்ம இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய கொழுப்பு, தசைத்திசுக்களுடன் கூடிய நீர்ம இழப்பு கெகேக்சியா எனப்படும் உயிர்கொல்லி நோய்க்கு வழி வகுக்கலாம்.[1]

எச்.ஐ.வி போன்ற கிருமித்தொற்றுகள் வளர்சிதைமாற்றத்தை மாற்றி எடை இழப்பிற்கு காரணமாகின்றன.[2]

அதிதைராய்டியம் போன்ற இயக்குநீர்களின் குறைபாடுகளினாலும் எடை இழப்பு ஏற்படலாம்[3]

ஒருவருக்கு கடந்த மாதத்தில் 5%க்கும் கூடுதலான எடை இழப்பும் கடந்த ஆறு மாதங்களில் 10% எடை இழப்பும் கவலை அளிக்கும் நிலைகளைக் குறிக்கும் எல்லை மதிப்புகளாகும்.[4]

மேற்கோள்கள்

  1. Morley, John E; Thomas, David R; Margaret-Mary G, Wilson (April 2006), "Cachexia: pathophysiology and clinical relevance", American Journal of Clinical Nutrition 83 (4): 735–743
  2. Mangili A, Murman DH, Zampini AM, Wanke CA (2006). "Nutrition and HIV infection: review of weight loss and wasting in the era of highly active antiretroviral therapy from the nutrition for healthy living cohort". Clin. Infect. Dis. 42 (6): 836–42. doi:10.1086/500398. பப்மெட்:16477562.
  3. "Thyroid and weight" (PDF). American Thyroid Association (2005). பார்த்த நாள் 2011-01-26.
  4. Page 67 in: The role of nutrition in maintaining health in the nation's elderly: evaluating coverage of nutrition services for the Medicare population. Author: Institute of Medicine (U.S.). Committee on Nutrition Services for Medicare Beneficiaries. ISBN 0309068460, 9780309068468

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.