ஊ தாண்ட்

ஊ தாண்ட் (U Thant, ஜனவரி 22, 1909நவம்பர் 25, 1974) என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் அவையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார்.

ஊ தாண்ட்
U Thant
ஐக்கிய நாடுகளின் 3வது பொதுச் செயலாளர்
பதவியில்
நவம்பர் 30, 1961  ஜனவரி 1, 1972
முன்னவர் டாக் ஹமாஷெல்ட்
பின்வந்தவர் கூர்ட் வால்ஹெயிம்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 22, 1909(1909-01-22)
பண்டானவ், பிரித்தானிய இந்தியா
இறப்பு நவம்பர் 25, 1974(1974-11-25) (அகவை 65)
நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
தேசியம் பர்மியர்
வாழ்க்கை துணைவர்(கள்) டாவு தெயின் டின்
சமயம் பௌத்தம்

ஆரம்ப வாழ்க்கை

ஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். 1948 இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். 1951 முதல் 1957 வரை பர்மிய பிரதமர் ஊ நூவுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். 1955 இல் இந்தோனீசியாவில் முதலாவது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்கியது.

1957 முதல் 1961 வரை ஐநாவின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். அல்ஜீரியாவின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.

ஐநா பொதுச் செயலாளர்

நவம்பர் 3, 1961 இல் தாண்ட் ஐநாவின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். நவம்பர் 30, 1962 இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கியூபாவின் ஏவுகணை விவகாரம், கொங்கோ உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர் டிசம்பர் 31, 1971 இல் சேவையில் இருந்து இளைப்பாறினார்.

மறைவு

ஊ தாண்ட் நவம்பர் 25, 1974 இல் புற்றுநோய் காரணமாக நியூயோர்க்கில் காலமானார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.