உள்ளங்கை

உள்ளங்கை (palm, volar) என்பது கையின் தொடக்கப் பகுதியில் அமைந்துள்ள, உட்பக்கப் பகுதி ஆகும். இதன் நுனியில் கைவிரல்களும்(fingers), மறுமுனையில் மணிக்கட்டும்(wrist) அமைந்துள்ளது. இதன் மறுபக்கத்தை, புறங்கை என்று அழைப்பர். உடலின் வெளிப்புறத்தில் உள்ளங்கை இருந்தாலும், புறங்கையை விட, வெள்ளை நிறமாகவோ, வெளிர் சிவப்பு நிறமாகவோக் காணப்படுகிறது. உள்ளங்கையின் உட்புறம், கோடுகள் போன்ற தோல் அமைவுகள் உள்ளன. இவற்றை கைரேகைகள் என்பர். இந்த ரேகைகள் உள்ளங்கைகளில் தோன்றுவது குறித்த மாறுபட்ட அறிவியல் கோட்பாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலோனார், கருப்பையின் உள்ளே கரு வளர்நிலையில், கைவிரல்கள் மூடிய நிலையிலேயே இருந்ததால் தோன்றி இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

உள்ளங்கையின் அமைவு

குரங்கினங்களில் உள்ளங்கை

பரிணாம வளர்ச்சியில் குரங்கினங்கள் உயர்நிலையாகக் கருதப்படுகின்றன. இதில் ஒராங்குட்டான், சிம்பன்சி ஆகிய குரங்கினங்களின் மரபுத்தடங்கள், மனிதனின் மரபுத் தடங்களோடு மிகவும் நெருக்கமாக ஒத்து வருகின்றன. எனவே, குரங்கினங்களின் உள்ளங்கை பயன்பாடு, மனிதனின் உள்ளங்கை பயன்பாடோடு பரிணாம அடிப்படையில் உயர்நிலையை அடைந்துள்ளது.

மனிதச் சமூகப் பொருண்மைகள்

  • உள்ளங்கை நெல்லிக்கனி என்ற பழமொழி, வெளிப்படையாக, தெளிவாக என்ற கருத்தைத் தெரிவிக்கிறது.
  • சமூகத்தில் உள்ளத்தூய்மை, ஒழுக்கம் என்பதைச் சுட்ட, இச்சொல் பயன் படுத்தப் படுகிறது. எடுத்துக்காட்டு,பொது வாழ்வில் உள்ளங்கை சுத்தமாக இருக்க வேண்டும்.
  • கைரேகைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தினைக் கணிக்கும் சோதிடமுறை, தமிழகத்தில் நெடுங்காலமாக இருக்கும் சமூக பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
  • பரத நாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்களில், உள்ளங்கை பலவகை முத்திரைகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது.
  • பல இந்திய இசைக்கருவியில் உள்ளங்கையின் பயன்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • கைத்தட்டல் ஓசை என்பது சமூக ஒப்புதலுக்கும், வரவேற்புக்கும், மகிழ்ச்சிக்கும் குறியாக, பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
  • இரு சக்கர, நான்கு சக்கர ஊர்திகளை இயக்கும் போது, உள்ளங்கையின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
  • குத்தூசி மருத்துவத்தின் கோட்பாடுகளின் படி, உடலின் முக்கிய நரம்புகள் முடிவடைவதால், சில நோய்களுக்கு, உள்ளங்கையின் முக்கிய இடங்களில் அம்மருத்துவம் செய்யப் படுகிறது.
  • திருமணம், தீபாவளி, இரமலான் நோன்பு போன்ற சமூக நிகழ்ச்சிகளில், உள்ளங்கையில் மருதாணி வைக்கும் வழக்கம், இந்தியாவில் அனைத்து மதத்தினவரிடமும் நிலவுகிறது.
  • வர்மகலையில் உள்ளங்கை மிகவும் பயனாகிறது.
  • கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்ற நோய் தாக்கும் போது, உள்ளங்கையின் நிறம், வழக்கத்திற்கு விரோதமாகச் சிவப்பு நிறமாகி, நோய் அறிகுறியாக விளங்குகிறது.

உடற்கூற்றியல்

காட்சியகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.