உலர்தாவரகங்களின் பட்டியல்
இங்கு கண்டங்களின் அடிப்படையில், உலர்தாவரகங்கள் (ஆங்கிலம்: "Herbarium"(ஒருமை) "herbaria"(பன்மை) )அட்டவணைப் படுத்தப்படுகின்றன. அவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்ட பின்பு, ஒவ்வொரு உலர் தாவரகும் தன்னகத்தே கொண்டுள்ள, உலர் தாவரகத்தாளின் எண்ணிக்கைகளும், பிற அடிப்படைக் குறிப்புகளும் தரப்படுகின்றன. உலர்தாவரகத்தில் பல வகைகள் உண்டு. பெரும்பான்மையான உலர்தாவரகத்தாள் வெள்ளைநிறமாகவும், அதன் வலப்புறகீழ்பக்கத்தில் ஒட்டப்படும் தாவரம் பற்றிய வகைப்பாட்டியல் குறிப்புகளும், நிலபரவல் குறிப்பும், அம்மாதிரியை எடுத்துப் பாதுகாத்தவர் பெயரும் குறிக்கப்படுகிறது.
ஒரு பேரினத்தின் கீழ் வரும், ஒரே வகையான சிற்றினங்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, ஒரு பேரின அடைவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. பிறகு, அப்பேரினங்களின், குடும்ப அடைவில், அப்பேரினங்களுக்குரிய உலர்தாவரத்தாள்களுள்ள அடைவுகள் பேணப்படுகின்றன. உலர்தாவரகத்தாளில் ஒட்டப்படும் தாவரமாதிரிகள் நிறம் மாறி விடுவதால், சில உலர்தாவரகங்கள் நிறங்களையும் குறிப்பிட்டு, அதற்குரிய குறிப்புத்தாளைக் கோர்த்து வைத்திருக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.
ஆப்பிரிக்கா
பெயர் | உலர்தாவரகத்தாள்கள்[1] | சுருக்கப்பெயர் | இருப்பிடம் | இணையம் |
---|---|---|---|---|
தென்னாப்பிரிக்காவின் தேசிய தாவர நிலையம் | 1,200,000 | PRE | தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் | |
கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்கள், கிழக்கு ஆப்பிரிக்க உலர்தாவரகம் | 1,000,000 | EA | கென்யா; நைரோபி | |
தென் ஆப்பிரிக்க தேசிய உயிரினப்பரவல் நிறுவனம் | 617,000 | NBG, SAM | தென்னாப்பிரிக்கா; கிளேர்மான்டு, மேற்கத்திய கேப் மாநிலம் | |
சிம்பாப்வே தேசிய உலர்தாவரகம் | 513,700 | SRGH | சிம்பாப்வே ; அராரே | |
போலசு உலர்தாவரகம் | 373,000 | BOL | தென்னாப்பிரிக்கா; ரோன்டேபௌச்சு, மேற்கு கேப் மாநிலம் | |
அல்சிரியப் பல்கலைக்கழகம் | 350,000 | AL | அல்சீரியா; அல்ஜியர்ஸ் | |
கெய்ரோ பல்கலைக்கழகம் | 300,000 | CAI, CAIM | எகிப்து; கெய்ரோ | |
அல்பானி அருங்காட்சியகம் | 200,000 | GRA | தென்னாப்பிரிக்கா; கிரகாம் நகரம், கிழக்கு கேப் மாநிலம் | |
தர் எசு சலாம் பல்கலைக்கழகம் | 125,000 | DSM | தன்சானியா; தர் எசு சலாம் | |
குவாசுலு-நடெல் பல்கலைக்கழகம் | 122,500 | NU | தென்னாப்பிரிக்கா; சுகாட்சுவில்லே, குவாசுலு-நடெல் மாகாணம் | |
'அறிவியல் நிறுவனம்' | 120,500 | RAB | மொராக்கோ; ரபாத்-அக்டல் | |
பிரிட்டோரியப் பல்கலைக் கழகம், எச்.சீ.டபள்யூ.சே. செவைக்கர்டு உலர்தாவரகம் | 120,000 | PRU | தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் | |
நொய்ரே ஆப்ரிக்கா அடிப்படை நிறுவனம் | 110,000 | IFAN | செனகல்; டக்கார் | |
நைசீரியாவின் வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் | 105,000 | FHI | நைசீரியா; இபாடன், ஓயோ மாநிலம் | |
நைரோபி பல்கலைக்கழகம் | 100,000 | NAI | கென்யா; நைரோபி | |
விட்வாட்டர்சுரேன்டு பல்கலைக்கழகம், சார்லசு இ. மோசு உலர்தாவரகம் | 100,000 | J | தென்னாப்பிரிக்கா; வைட்சு, கௌடெங்ஙு மாகாணம் | |
கமரூனின் தேசிய உலர்தாவரகம் | 96,000 | YA | கமரூன்; யாவுண்டே | |
கானாப் பல்கலைக்கழகம் | 90,000 | GC | கானா; லெகோன் | |
தேசிய தாவரவியல் ஆய்வு நிலையம் | 76,000 | WIND | நமீபியா; விந்தோக் | |
எட்வார்டோ மான்டேல் பல்கலைக்கழகம் | 63,000 | LMU | மொசாம்பிக்; மபூட்டோ | |
தேசிய பூஞ்சையியல் உலர்தாவரகம் | 60,000 | PREM | தென்னாப்பிரிக்கா; பிரிட்டோரியா, கௌடெங்ஙு மாகாணம் | |
அவுகடவ்குப் பல்கலைக்கழகம் | 12,000 | OUA | புர்க்கினா பாசோ; அவுகடவ்கு |
அடிக்குறிப்புகள்
- Holmgren, P. K.; N. H. Holmgren (1998, continuously updated). Index Herbariorum: A global directory of public herbaria and associated staff. New York: New York Botanical Garden. http://sciweb.nybg.org/science2/IndexHerbariorum.asp. பார்த்த நாள்: 2008-06-18.