உதயணன், மகத நாடு

உதயணன் (King Udayin) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட ஹரியங்கா வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் மகத நாட்டை கிமு 460 முதல் கிமு 440 வரை ஆண்டார். உதயணன், அஜாதசத்ருவின் மகனும், பிம்பிசாரனின் பேரனும் ஆவார்.[1]

உதயணன், மகத நாடு
மகத நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம் அண்.460 – அண்.440 கிமு
முன்னையவர் அஜாதசத்ரு
பின்னையவர் அனுருத்தன்
குடும்பம் ஹரியங்கா வம்சம்
தந்தை அஜாதசத்ரு
பிறப்பு கிமு ஐந்தாம் நூற்றாண்டு
இறப்பு கிமு 440

பாடலிபுத்திரம் நகரத்தை நிறுவதல்

உதயணன் சோன் ஆறு மற்றும் கங்கை ஆறு கூடுமிடத்தில் பாடலிபுத்திரம் எனும் புதிய நகரத்தை நிறுவி, தனது தலைநகரத்தை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.

வாரிசு

உதயணனுக்குப் பின் அவரது மகன் அனுருத்தன் மகத நாட்டை ஆண்டார்.[2]

மேற்கோள்கள்

  1. Agnihotri, V.K.. Indian History. Allied Publishers. பக். 168. https://books.google.com/books?id=MazdaWXQFuQC.
  2. Nath Sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 114. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA114#v=onepage&q&f=false.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.