ஈரானின் மாகாணங்கள்

ஈரான் 31 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களின் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநரும், ஈரானின் உள்துறை அமைச்சரால் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு நியமிக்கப்படுவார்.

ஈரானின் அரசாட்சிப் பிரிவு

வரலாறு

1950 வரை. ஈரான் 12 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை அர்தலான், அசர்பைசான், பலூச்சிஸ்தான், பார்ஸ், கிலன், அராக்-எ அஜம், கொரசான், குசஸ்தான், கெர்மான், இலாரஸ்தான், லொரஸ்தான், மஜந்தரன் ஆகும். 1950-ஆம் ஆண்டு ஈரான் நாடு 10 மாகாணங்களுடனும் அதன் கீழ் ஆளுகைகளுமாய் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அவை கிலான்; மஜந்தரன்; கிழக்கு அசர்பைசான்; மேற்கு அசர்பைசான்; கேர்மான்ஷா; குசஸ்தான்; ஃபர்ஸ்; கெர்மான்; கொரசான் மற்றும் இஸ்ஃபஹான் ஆகும். 1960-இலிருந்து 1981 வரை ஒவ்வொரு ஆளுகைகளும், மாகாணங்களாக உயர்த்தப்பட்டன. மிகச் சமீபமாக 2004ஆம் ஆண்டு மிகப்பெரிய மாகாணமான கொரசான் மாகாணத்தை மூன்று மாகாணங்களாக ஈரான் பிரித்துள்ளது.


பட்டியல்

மாகாணம் தலைநகரம் பரப்பளவு[1] மக்கள் தொகை[2] பெருமாவட்டங்கள்(counties) மற்ற தகவல் வரைபடம்
அர்தாபில்அர்தாபில்17800 ச.கிமீ1,257,62491993 வரை, அர்தாபில் கிழக்கு அசர்பைசான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது.[3]
கிழக்கு அசர்பைசான்தப்ரீசு45650 ச.கிமீ3,620,18319
மேற்கு அசர்பைசான்உர்மியா37437 ச.கிமீ2,949,42614பாலவி பேரரசு இருந்தபோது உர்மியா இரேசையே என்று வழங்கப்பட்டது.
புஷெர்பூசெகர்22743 ச.கிமீ887,1159முதலில் ஃபர்ஸ் மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இந்த மாகாணம் கலீஜ்-ஏ-ஃபர்ஸ் என்ற பெயரால் வழங்கப்பட்டது.(Persian Gulf)
சஹர் மஹல் மற்றும் பக்தியாரிசாகர்-இ கொர்து16332 ச.கிமீ842,00261973 வரை இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஃபர்ஸ்ஷிராஸ்122608 ச.கிமீ4,385,86923
கிலான்ரஷ்த்து14042 ச.கிமீ2,410,52316
கொலெஸ்தான்கொர்கான்20195 ச.கிமீ1,637,06311மே 31, 1997 அன்று, அலியாபாத்கொன்பாத்-எ-காவுஸ், கொர்கான், கொர்த்குய், மினுதஸ்து மற்றும் துருக்கமான் ஆகிய ஷேரிஸ்தான்கள், மஜந்தரன் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கொலெஸ்தான் மாகாணமாக அறிவிக்கப்பட்டது. 1937 வரை கொர்கான் எஸ்தராபா அல்லது அஸ்தராபா என்று அழைக்கப்பட்டது
ஹமாதான்ஹமாதான்19368 ச.கிமீ1,790,7708முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது
ஹொர்மொஸ்கான்பந்தர் அப்பாஸ்70669 ச.கிமீ1,410,66711கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1977 வரை, இம்மாகாணம் பனாதார் வா ஜாசயேர்-எ பாஹ்ர்-எ ஒமான் என்று வழங்கப்பட்டது.
இலாம்இலாம்20133 ச.கிமீ545,0937முதலில் கெர்மான்ஷா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது
இஸ்ஃபஹான்இஸ்ஃபஹான்107029 ச.கிமீ4,590,595211986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் ஆகிய மாகாணங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டன.
கெர்மான்கெர்மான்180836 ச.கிமீ2,660,92714
கெர்மான்ஷாகெர்மான்ஷா24998 ச.கிமீ1,938,060131950-க்கும், 1979-க்கும் இடைப்பட்ட காலத்தில், கெர்மான்ஷா மாகாணமும், நகரமும், கெர்மான்ஷாஹன் என்று அழைக்கப்பட்டது. 1979-க்கும், 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில், அது "பக்தரான்" என்று அழைக்கப்பட்டது.
கொரசான், வடக்குபொஜ்னூருது28434 ச.கிமீ820,918629 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
கொரசான், இரசாவிமஷாது144681 ச.கிமீ5,620,7701929 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
கொரசான், தெற்குபிர்ஜாந்து69555 ச.கிமீ640,218429 செப்டம்பர் 2004-இல், கொரசான் மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அவை வடக்கு கொரசான், இரசாவி கொரசான் மற்றும் தெற்கு கொரசான் ஆகும்.
குஜெஸ்தான்அஹ்வாஸ்64055 ச.கிமீ4,345,60718
கோகிலுயே மற்றும் பொயர்-அஹ்மாத்யசூஜ்15504 ச.கிமீ695,0995குஜெஸ்தான் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1990 வரை, இம்மாகாணம் பொவிர் அஹ்மாதி மற்றும் கொக்கிளுயே என்று அழைக்கப்பட்டது
குர்திஸ்தான்சனந்தாஜ்29137 ச.கிமீ1,574,1189முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
லொரஸ்தான்கொர்ரமாபாத்28294 ச.கிமீ1,758,6289முதலில் குஜெஸ்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
மர்கசிஅரக்29130 ச.கிமீ1,361,39410மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள், இஸ்ஃபஹான் , செம்னன், மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.
மாசாந்தரான்சாரி23701 ச.கிமீ2,940,83115
கஸ்வின்கஸ்வின்15549 ச.கிமீ1,166,86151996-ம் ஆண்டின் கடைசி நாளன்று, சஞ்சன் மாகாணத்தின் கசவின் மற்றும் தகேஸ்தான ஷாறேஸ்தான்கள் பிரிக்கப்பட்டு கஸ்வின் மாகாணம் உருவாக்கப்பட்டது
கொம்கொம்11526 ச.கிமீ1,064,45611995 வரை, கொம் தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு ஷாரேஸ்தானாக விளங்கியது
செம்னன்செம்னன்97491 ச.கிமீ590,5124மஜந்தரன் மாகாணத்தின் ஒரு பகுதியாக முதலில் இருந்தது.[4] 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன
சிஸ்தான் மற்றும் பலூச்சிஸ்தான் ஜகேதான்181785 ச.கிமீ2,410,07681986 வரை, இந்த மாகாணத்தின் பெயர் பலூச்சிஸ்தான் மற்றும் சிஸ்தான் என்று இருந்தது.
தெஹ்ரான் தெஹ்ரான்18814 ச.கிமீ13,530,742131986 வரை, தெஹ்ரான், மர்கசி மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
யசுதுயாசுது129285 ச.கிமீ992,31810முதலில் இஸ்ஃபஹான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[5] 1986-இல், கெர்மான் மாகாணத்தின் ஒரு பகுதி யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. 2002-இல், தபசு ஷாரேஸ்தான் (பரப்பளவு: 55,344 km²) கொரசான் மாகாணத்திலிருந்து யசுது மாகாணத்திற்கு மாற்றப்பட்டது
சஞ்சன்சஞ்சன்21773 ச.கிமீ970,9467முதலில் கிலான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-இல், மர்கசி மாகாணத்தின் சில பகுதிகள் இஸ்ஃபஹான், செம்னன் மற்றும் சஞ்சன் மாகாணங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன
ஈரான் (மொத்தம்)தெஹ்ரான்1628554 ச.கிமீ71,767,413324

வெளி இணைப்புகள்

மூலம்

  1. Statistical Centre, Government of Iran. ""General Characteristics of Ostans according to their administrative divisions at the end of 1383 (2005 CE)"". பார்த்த நாள் 2006-04-30.
  2. Statistical Centre, Government of Iran. ""Population estimation by urban and rural areas, 2005"". பார்த்த நாள் 2006-04-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.