ஒறுமொசுகான் மாகாணம்

ஹொர்மொஸ்கான் மாகாணம் (Hormozgan Province (பாரசீகம்: استان هرمزگان, Ostān-e Hormozgān) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. இது நாட்டின் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்தது ஆகும்.[2] நாட்டில் உள்ள மாகாணங்களின் வளர்சியை நோக்கமாக கொண்டு மாகாணங்களை 2014 சூன் 22 அன்று ஐந்து பிராந்தியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. மாகாணம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதன் பரப்பளவு 70,697 km2 (27,296 sq mi),[3] மாகாணத்தின் தலைநகராக பண்டார் அப்பாஸ் நகரம் உள்ளது. மாகாணமானது பாரசீக வளைகுடாவில் பதினான்கு தீவுகளையும், 1,000 கிமீ (620 மைல்) நீளம் கொண்ட கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.

ஹொர்மொஸ்கான் மாகாணம்
Hormozgan Province

استان هرمزگان
மாகாணம்

ஹொர்மொஸ்கான் மாகாண மாவட்டங்கள்

ஈரானில் ஹொர்மொஸ்கான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27.1884°N 56.2768°E / 27.1884; 56.2768
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 2
தலைநகரம்பண்டார் அப்பாஸ்
மாவட்டங்கள்13
அரசு
  ஆளுநர்ஜேசிம் ஜடேரி
பரப்பளவு
  மொத்தம்70,697
மக்கள்தொகை (2016)[1]
  மொத்தம்17,76,415
  அடர்த்தி25
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
  கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
முதன்மை மொழிகள்பெரும்பாலும் பாரசீகம்
பலூச்சி (முதன்மையாக கிழக்குப் பகுதியில் பண்டார் அப்பாஸ்)

இந்த மாகாணத்தில் பண்டார அபாஸ், பண்டார் லேங்கே, ஹஜியாபாத், மினப், குஷெம், சர்தாஷ்ட், சீக்கிய், ஜஸ்க், பாஸ்தாக், பண்டார் காமர், பார்சியன், ருடான், அபூமுஸா ஆகிய 13 முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த மாகாணமானது 13 மாவட்டங்கள், 69 நகராட்சிகள் மற்றும் 2,046 கிராமங்களைக் கொண்டுள்ளது. 2011 காலகட்டத்தில் மாகாணத்தின் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும். ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் பார்சியன் கவுண்டி, பஸ்தாக் கவுண்டி, பந்தர் லெங்கேஷ் கவுண்டி, அபூமஸ்யூ கவுண்டி, குஷெம் கவுண்டி, காமீர் கவுண்டி, பண்டார் அபாஸ் கவுண்டி, ஹஜ்ஜியாபாத் கவுண்டி, ருடான் கவுண்டி, மனாப் கவுண்டி, சீக் கவுண்டி, பாஷார்ட் கவுண்டி, ஜாக்ஸ்க் கவுண்டி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

புவியியலும், காலநிலையும்

இந்த மாகாணமானது ஒரு மலைப்பிரதேசமாகும், இது சக்ரோசு மலைத்தொடரின் தெற்கு முனையாகும். மாகாணத்தில் மிகவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. கோடைகாலத்தில் சில சமயங்களில் 120 °F (49 °C) வரை மிகுதியான வெப்பம் இருக்கும். ஆண்டு முழுவதும் மிக குறைந்த மழைப் பொழிவு இருக்கும்.

இன்றைய ஹொர்மொஸ்கான்

ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் தற்போது 11 துறைமுகங்கள், ஐந்து உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மாகாணத்தின் முதன்மையான துறை வேளாண் துறையாகும். தேசிப்பழ உற்பத்தியில் இந்த மாகாணம் ஈரானில் முதலிடம் வகிக்கிறது, மேலும் பேரீச்சை உற்பத்தித்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஈரானின் மீன்பிடிப் பொருட்களில் இந்த மாகாணத்தில் இருந்து 30% இருந்து வருகிறது. இங்கு உள்ள மூன்று பெரிய நீர்மின் அணைகளான எஸ்டெகலால் அணை, ஜெஜின் அணை, செம்மில் அணை ஆகிய அணைகள் மாகாணத்தின் தேவையைக்கு உதவுகின்றன.

அண்மையில் ஜேர்மனானது கிஷெஸ் தீவை முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கும் பாலம் ஒன்றை கட்டியெழுப்ப முன்வந்துள்ளது.

ஹொர்மொஸ்கான் மாகாணமானது இரு கட்டற்ற வணிக வலயங்களைக் கொண்டுள்ளது. இவை கிஷ் நகரில் ஒன்றும், குஷெம் தீவில் மற்றொன்றும் அமைந்துள்ளன உள்ளது. கட்டற்ற வணிக வலயத்தைக் கொண்டுள்ள கிஷ் தீவானது ஈரானிய எண்ணெய் வளப் பகுதியில் அமைந்துள்ளது.

முக்கிய இடங்கள்

ஹொர்மொஸ்கான் மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளன. ஈரானின் கலாசார மரபு அமைப்பானது, இந்த மாகாணத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 212 தளங்களை பட்டியலிட்டிருக்கிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.