சகார் மகாலும் பகுதியாரியும் மாகாணம்

சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாணம் (Chaharmahal and Bakhtiari Province (பாரசீகம்: استان چهارمحال و بختیاری, Ostān-e Chahār-Mahāl-o Bakhtiyārī ) என்பது ஈரானின் உள்ள முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் தென் மேற்கில் உள்ளது. இதன் தலைநகராக ஷாஹ்ர்-இ கோர்ட் நகரம் உள்ளது.

சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாணம்
Chahar Mahaal and Bakhtiari Province

استان چهارمحال و بختیاری
மாகாணம்

சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாண மாவட்டங்கள்

ஈரானில் சஹர் மஹல் மற்றும் பக்தியாரி மாகாணம் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள்: 32.3275°N 50.8546°E / 32.3275; 50.8546
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் இரண்டு [1]
தலைநகரம்Shahrekord
மாவட்டங்கள்9
அரசு
  ஆளுநர்கேசெம் சோலிமனி டாஸ்தாக்கி
பரப்பளவு
  மொத்தம்16,332
மக்கள்தொகை (2016)[2]
  மொத்தம்9,47,763
  அடர்த்தி58
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
  கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
மொழிகள்லூரி
பாரசீகம்
Chaharmahal and Bakhtiari Province Historical population
ஆண்டு ம.தொ.
2006 8,43,784     
2011 8,95,263 +6.1%
2016 9,47,763 +5.9%
amar.org.ir

இந்த மாகாணமானது ஈரானின் இரண்டாவது வட்டாரத்தில் உள்ளது. நாட்டில் உள்ள மாகாணங்களின் வளர்சியை நோக்கமாக கொண்டு மாகாணங்களை 2014 சூன் 22 அன்று ஐந்து பிராந்தியங்களாக ஒருங்கிணைக்கப்பட்டது.[1]

இந்த மாகாணத்தின் பரப்பளவானது 16,332 சதுர கிலோமீட்டராக உள்ளது, 2011 இல் இதன் மக்கள் தொகையானது 895,263 என இருந்தது.[3]

மக்களும், பண்பாடும் 

மாகாணத்தின் வரலாறானது பக்ரியரி பழங்குடியினருடன் பிணைந்துள்ளது. பக்ரியரி பழங்குடியினர் இரண்டு உட்பிரிவு மக்களாக  ஹாஃப்ட் லாங் மற்றும் சாஹார் லாங் என உள்ளனர். மேலும் இவர்கள் முதன்மையாக லூரிஷ் மொழியை பேசுபவர்களாக உள்ளனர். இந்த பண்டைய மாகாணத்திலுள்ள மற்ற குழுவானது சேஹர் மகாலிகள் ஆவர்.  இந்த மக்கள் தங்களுக்குள் ஒத்த பழக்க பழக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.   மிகச் சிறிய வேறுபாடுகள் இவற்றுக்கு இடையில் உள்ளன, ஆனால் அவை எளிதாக கவனிக்க முடியாதவையாகும். இருப்பினும், திருமணமானது இந்த மக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டாக  பயன்படுகிறது.

இந்த மாகாண மக்கள் எளிமையான வாழ்வை மேற்கொண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். மேலும் சூழ்நிலையும் அவசியமும் தேவைப்பட்டால் திறமையான வீரர்களாகவும் போராளிகளாகவும் மாறும் திறன் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். இவர்கள்  ஈரானில் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் என்னும் நற்பெயரைப் பெற்றிருக்கிறார்கள். இந்த மாகாண மக்கள் மல்யுத்தத்தில் பாரம்பரியமாக ஒரு பாணியைக் கொண்டவர்களாக உள்ளனர்.

'பழங்குடி' வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய பல்வேறு தனித்துவமான மரபுகள் மற்றும் சடங்குகள் இந்த மாகாணத்தில் உள்ளன. இசை, நடனம் மற்றும் ஆடைகள் போன்றவற்றில் உள்ள சிறப்பு வகைகள் குறிப்பிடத்தக்கவை.

மொழிகள்

ஈரானிய மொழி குடும்பத்தின் தென்மேற்கு கிளையைச் சேர்ந்த பாக்தியாரி மொழியே மாகாணத்தின் முக்கிய மொழி ஆகும்.  மாகாணத்தின் மேற்குப் பகுதியிலுள்ள உயர் நிலங்களின் பள்ளத்தாக்களில் பக்தியாரி முதன்மையாகப் பேசப்படுகின்றது. இது தெற்கில் லார்டுகேனைச் சுற்றியுள்ள தாழ் நிலப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. மேலும் இது வடகிழக்கு பகுதி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களால்  பேசப்படுகிறது.[4]

மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள கால்பங்கு மக்கள் சரமஹாலி  அல்லது துருக்கியைப் பேசுகின்றனர். கிராமப்புறங்களில் பேசப்படும் சரமஹாலியின் பல வகைகள் உள்ளன. இந்த மாகாணத்தில் பெரும்பாலும் பேசப்படும் துருக்கியானது ஃபார்ஸ் மாகாணத்தின் கஷ்காக் போன்றே இருக்கும், ஆனால் அவை வடமேற்கு ஈரானின் அஜர்பாஜானி  மொழியில் இருந்து மாறுபடுகின்றன. சரமஹாலி மற்றும் துர்க்கி மொழிகள் இப்பகுதியில் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன, மற்றும் ஜாக்ரசின் மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களில், அவை பாக்தியாரியுடன் கலக்கின்றன.

தெஹ்ரான்-வகை பாரசீகமானது, மாகாணத்தின் சில பகுதிகளில் குழந்தைகளுக்கு பெற்றோரால் கற்பிக்கப்பட்டு வருகிறது, இது நகரங்களில் அதிக அளவு நடக்கிறது.


பொருளாதாரம்

இந்த மாகாணத்தின் பொருளாதாரத்தில் வேளாண் துறையானது முதன்மையாக உள்ளது. பெரும்பாலான தொழில்களானது மாகாணத்தின் மையப்பகுதியைச் சுற்றி  உள்ளது.

இந்த மாகாணத்தின் இயற்கை வளங்கள் காரணமாக,  ஒரு துடிப்பான சுற்றுலா பகுதியாக  உருவெடுத்துள்ளது.

மேற்கோள்கள்

  1. همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند
  2. "National census 2016". amar.org.ir. பார்த்த நாள் 2017-03-14.[]
  3. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-05-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-09-28.CS1 maint: Archived copy as title (link)
  4. Taheri-Ardali, Mortaza, Erik Anonby, et al. 2015. Language distribution in Chahar Mahal va Bakhtiari Province, Iran. http://iranatlas.net/index.html?module=module.language-distribution.chahar_mahal_va_bakhtiari. In Erik Anonby, Mortaza Taheri-Ardali, et al. (eds.). 2015-2017. Atlas of the Languages of Iran. Ottawa: Geomatics and Cartographic Research Centre, Carleton University. Online address: http://iranatlas.net (retrieved December 3, 2017).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.