யாசுது மாகாணம்
இயாஸ்த் மாநிலம் (Yazd Province, பாரசீகம்: استان یزد, Ostān-e Yazd ) ஈரானின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் மையத்தில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் தலைநகர் இயாஸ்த் ஆகும். 2014இல் இது மண்டலம் 5இல் சேர்க்கப்பட்டது.[1]
யாஸ்த் மாநிலம் استان یزد | |
---|---|
ஈரானிய மாநிலம் | |
![]() | |
![]() ஈரானில் இயாஸ்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மண்டலம் | மண்டலம் 5 |
தலைநகரம் | இயாஸ்த் |
கவுன்ட்டிகள் | 10 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,29,285 |
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1 |
• அடர்த்தி | 8.3 |
நேர வலயம் | ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+03:30) |
• கோடை (பசேநே) | ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+04:30) |
முதன்மை மொழிகள் | பாரசீகம் பெகதினி¹ |
131,575 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலம் பத்து கவுன்ட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அபர்கு கவுன்ட்டி, அர்தகான் கவுன்ட்டி, பாஃப்க் கவுன்ட்டி, பெகபாத் கவுன்ட்டி, கதம் கவுன்ட்டி, மெஹ்ரிஸ் கவுன்ட்டி, மெபோத் கவுன்ட்டி, அஷ்கெசர் கவுன்ட்டி, டஃப்ட் கவுன்ட்டி, இயாஸ்த் கவுன்ட்டி. 1996 கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 750,769 ஆகும்; இதில் 75.1% நகர்ப்புறவாசிகள், மீதம் 24.9% சிற்றூர்வாசிகள் ஆவர். 2011 கணக்கெடுப்பில், இதன் மக்கள்தொகை (தென் கோரசன் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட டபாஸ் கவுன்ட்டியையும் சேர்த்து) 1,074,428 ஆக இருந்தது. டபாசு கவுன்ட்டி நீங்கலாக 2006இல் 895,276 ஆக இருந்தது.[2]
இயாஸ்த் நகரம் இதன் நிர்வாகத் தலைநகராக மட்டுமன்றி பொருளியல் நிலைக்கானத் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதுவே இம்மாநிலத்தில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது.

மேற்சான்றுகள்
- "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian (Farsi)). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali). Archived from the original on 23 June 2014. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.
- http://iran.unfpa.org/Documents/Census2011/2011%20Census%20Selected%20Results%20-%20Eng.pdf