இலக்கியச் சிந்தனை

1970 முதல் சென்னையில் இயங்கும் அமைப்பு. அச்சிதழ்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த தமிழ்ச் சிறுகதை ஒன்றைத் தெரிவு செய்து பரிசளித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளில் இருந்து ஒன்றைத் தெரிந்து ஆண்டின் சிறந்த சிறுகதையாக அறிவிக்கிறார்கள். இந்த பன்னிரண்டு சிறுகதைகளையும் ஒரு தொகுப்பு நூலாக வெளியிடுகிறார்கள்.

இவ்வாறு ஆண்டின் சிறந்த சிறுகதைகளாகத் தெரிவான சிறுகதைகளும், அவற்றை எழுதிய ஆசிரியர்களும், அச்சிறுகதை வெளியான இதழும் அடங்கிய அட்டவணை கீழே தரப்படுகிறது

சிறுகதைத் தலைப்புஆண்டுதெரிவு செய்த நடுவர்வெளியான இதழ்சிறுகதை ஆசிரியர்
ஒற்றைச் சிறகு2012வண்ணதாசன்ஆனந்தவிகடன்தமிழருவி மணியன்
கோடி2011வெண்ணிலா, அஆனந்த விகடன்பாரதி கிருஷ்ணகுமார்
'ஹேப்பி தீபாவலி'2009மூர்த்தி, வா தேவகோட்டைஆனந்த விகடன்ராஜூ முருகன்
யாசகம்2008சாருகேசிகுமுதம் தீராநதிபீர்முகமது, களந்தை
வெள்ளையம்மா2007வைத்தீஸ்வரன்குமுதம்மகேஷ்வரன், க
அருவி2006ராஜம் கிருஷ்ணன்தீராநதிஶ்ரீராம், என்
இடியுடன் கூடிய மழை நாளில்...2005சிவசங்கரிபுதிய பார்வைஜெயராஜ், செம்பூர்
கழிவு2004கிருஷ்ணன், திருப்பூர்ஆனந்த விகடன்ஆண்டாள் பிரியதர்ஷினி
மனசு2003மாணிக்கவாசகன், ஞாகுமுதம்உஷா, வி
தொலைந்தவன்2002ரங்கராஜன், எம்.ஆர்கணையாழிமஹி
கூரை2001திலீப்குமார்ஆனந்த விகடன்இராமமூர்த்தி, வேல
நாற்று2000அம்பைஇந்தியா டுடேக. சீ. சிவகுமார்
முடிவு1999சார்வாகன்தினமணி கதிர்இந்திரா
ரோஷாக்னி1998இளசை அருணாஆனந்த விகடன்பொன்னுச்சாமி, மேலாண்மை
அண்ணா சாலையில் ஒரு இந்தியன்1996ராமாமிர்தம், லா.சஆனந்த விகடன்இரா இரவிசங்கர்
ரத்தத்தின் வண்ணத்தில்1995ரங்கராஜன், ரா.கிஇந்தியா டுடேஇரா நடராஜன்
(அ)ஹிம்சை1994சிவசங்கரிஇந்தியா டுடேதர்மன், சோ
கடிதம்1993அசோகமித்திரன்இந்தியா டுடேதிலீப்குமார்
நசுக்கம்1992பிரேமா நந்தகுமார்சுபமங்களாதர்மன், சோ
வெறுங்காவல்1991சிவசங்ரன், தி.கதினமணி கதிர்இரா முருகன்
வேரில் துடிக்கும் உயிர்கள்1990ஆர்விசெம்மலர்போப்பு
அற்றது பற்றெனில்1989ராகவன், ஏ.எஸ்அமுதசுரபிஇந்திரா பார்த்தசாரதி
மாண்புமிகு மக்கள்1988மகரிஷிகலைமகள்இந்திரா சௌந்தர்ராஜன்
தயவு செய்து...1983நீல பத்மநாதன்தாமரைபீர்முகமது, களந்தை
பிரும்மம்1982கரிச்சான் குஞ்சுகணையாழிபிரபஞ்சன்
அவள்1981ராஜநாராயணன், கிஆனந்த விகடன்ஜெயந்தன்
சின்னம்மிணி1980வல்லிக்கண்ணன்தினமணி கதிர்கிருஷ்ணன், திருப்பூர்
அற்ப ஜீவிகள்1979ராமையா, பி.எஸ்கணையாழிமலர் மன்னன்
ஞாபகம்1975ராஜம் கிருஷ்ணன்தீபம்வண்ணதாசன்
தனுமை1974ரங்கராஜன், எஸ்தீபம்வண்ணதாசன்
கனவுக் கதை1971சுந்தர ராமசாமிஞானரதம்சார்வாகன்
பிண்ணனி1970அனந்தநாராயணன், மாகலைமகள்ராகவன், ஏ.எஸ்

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.