க. சீ. சிவகுமார்
க. சீ. சிவகுமார் (இறப்பு: 3 பிப்ரவரி 2017) தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர் ஆவார். 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்தார். சிறந்த சிறுகதைக்கான 'இலக்கிய சிந்தனை விருது' 2000ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தில் பிறந்தவர். திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியவர்.
பத்திரிகையாளராக விகடன், தினமலர் ஆகிய நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
மறைவு
3 பிப்ரவரி 2017 அன்று பெங்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.[1][2]
வெளிவந்த நூல்கள்
- கன்னிவாடி
- ஆதிமங்கலத்து விஷேசங்கள்
- குணச்சித்திரங்கள்
- உப்புக்கடலை குடிக்கும் பூனை
- க. சி. சிவகுமாரின் குறு நாவல்கள்
மேற்கோள்கள்
- "எழுத்தாளர் க.சீ. சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்". செய்தி. தினமணி. பார்த்த நாள் 5 பெப்ரவரி 2017.
- எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பெங்களூருவில் மரணம்: மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.