இராகம் தானம் பல்லவி
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.[1]
நிகழ்த்தப்படும் தருணம்
ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தானம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.
நிகழ்த்தப்படும் விதம்
இராகம் தானம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.
பயன்படுத்தப்படும் இராகங்கள்
கச்சேரிகளில் இராகம் தானம் பல்லவிக்காக பரவலாக பயன்படுத்தப்படும் இராகங்களின் பட்டியல்:-
- சங்கராபரணம்
- கல்யாணி
- கல்யாணவசந்தம்
- சண்முகப்பிரியா
- கீரவாணி
- ஹிந்தோளம்
- பிலகரி
- மோகனம்
- சஹானா
- தோடி
- கரகரப்பிரியா
- வராளி
- பிருந்தாவனசாரங்கா
- ஜனரஞ்சனி
- சாவேரி
- பந்துவராளி
- சிம்ஹேந்திரமத்யமம்
- நாட்டை
- நாட்டைக்குறிஞ்சி
- பேகடா
- சலகபைரவி
- காபி (இராகம்)
உசாத்துணை
- இராகம் தானம் பாடவேண்டிய முறை பற்றி ஆர். வேதவல்லியின் விளக்கம்
- ஆர். வேதவல்லி வழங்கிய செயல் விளக்கவுரை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.