இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்[1] [2]. இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.

வரலாறு

இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார். அவருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 திசம்பரில் இந்தியாவின் முதல் வானூர்தி தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது.

இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. India's HAL among top 100 global aerospace companies: PwC surveyஹைபீம் (முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்) (ஆங்கில மொழியில்)
  2. HAL ranks 34 among top 100 global defence firms ஹைபீம் (முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்) (ஆங்கில மொழியில்)
  3. "இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் கதை… ரஃபேல் துணைக் கதையும்தான்!". கட்டுரை. இந்து தமிழ் (2018 நவம்பர் 13). பார்த்த நாள் 14 நவம்பர் 2018.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.