இந்தியாவின் வருவாய் வட்டங்கள்
இந்தியாவின் வருவாய் வட்டங்கள் அல்லது இந்தியாவின் தாலுகாக்கள் (Tehsils of India) என்பது இந்திய நிர்வாக அலகான மாவட்டங்களின் துணை வருவாய் மாவட்டங்கள் ஆகும். வருவாய் வட்டங்கள் பல இந்திய மாநிலங்களில் தாலூகா என்றும், மண்டல் என்றும் சமூக வளர்ச்சி வட்டாரம் (Community Development Block) என்றும் உட்கோட்டம் என்றும், வட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்திய நிர்வாக அலகுகள்
மாநிலவாரியாக இந்தியவின் தாலுகாக்கள்
இந்திய மாநிலங்களில், தாலுகா எனப்படும் துணை மாவட்டங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.[1]
மாநிலம் | துணை மாவட்டத்தின் பெயர் | துணை மாவட்டங்களின் எண்ணிக்கை |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | மண்டல் | 661 |
அருணாசலப் பிரதேசம் | வட்டம் | 149 |
அசாம் | வட்டம் | 155 |
பிகார் | சமூக வளர்ச்சி வட்டாரம் | 533 |
சத்தீஸ்கர் | தாலுகா | 97 |
கோவா | தாலுகா | 12 |
குஜராத் | தாலுகா | 248[2] |
அரியானா | தாலுகா | 67 |
இமாசலப் பிரதேசம் | தாலுகா | 109 |
ஜம்மு காஷ்மீர் | தாலுகா | 59 |
ஜார்கண்ட் | சமூக வளர்ச்சி வட்டாரம் | 210 |
கர்நாடகம் | தாலுகா | 175 |
கேரளா | தாலுகா | 63 |
மத்தியப் பிரதேசம் | தாலுகா | 353 |
மகாராட்டிரம் | தாலுகா | 353 |
மணிப்பூர் | உட்கோட்டம் | 38 |
மேகாலயா | சமூக வளர்ச்சி வட்டாரம் | 39 |
மிசோரம் | கிராம வளர்ச்சி வட்டாரம் | 22 |
நாகாலாந்து | வட்டம் | 93 |
ஒடிசா | காவல் நிலையம் | 485 |
பஞ்சாப் | தாலூகா | 72 |
இராஜஸ்தான் | தாலுகா | 268 |
சிக்கிம் | உட்கோட்டம் | 9 |
தமிழ்நாடு | வருவாய் வட்டம் | 201 |
தெலங்கானா | தாலுகா | 446 |
திரிபுரா | சமூக வளர்ச்சி வட்டாரம் | 38 |
உத்தரப் பிரதேசம் | தாலுகா | 316 |
உத்தரகாண்ட் | தாலுகா | 49 |
மேற்கு வங்காளம் | சமூக வளர்ச்சி வட்டாரம் | 341 |
ஒன்றியப் பகுதிகள் | துணை மாவட்டத்தின் பெயர் | துணை மாவட்டங்களின் எண்ணிக்கை |
---|---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | தாலுகா | 7 |
சண்டிகர் | தாலுகா | 1 |
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | தாலுகா | 1 |
தாமன், தியு | தாலுகா | 2 |
தில்லி | தாலுகா | 27 |
இலட்சத்தீவுகள் | உட்கோட்டம் | 4 |
புதுச்சேரி | நகரப் பஞ்சாயத்து | 10 |
மொத்தம்: அனைத்திந்தியா அளவில் = 5564
மேற்கோள்கள்
- "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs". Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi (2010–2011). பார்த்த நாள் 2011-10-03.
- "State Govt Announces 23 New Talukas" (10 September 2013). பார்த்த நாள் 5 January 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.