இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிரிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில் முதல் கம்யூனிஸ்ட் கிளை நிறுவப்பட்டதாக சொல்கிறது.[2] இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Communist Party of India | |
---|---|
CPI | |
![]() | |
பொதுச்செயலாளர் | து. ராஜா |
மக்களவைத் தலைவர் | சி. என். ஜெயதேவன் |
தொடக்கம் | 26 திசம்பர் 1925கான்பூர், இந்தியா (இன்றையy கான்பூர்) |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா-110002 |
செய்தி ஏடு | |
இளைஞர் அமைப்பு | அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு |
பெண்கள் அமைப்பு | இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு |
தொழிலாளர் அமைப்பு | அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசு, பாரதிய கீத் மசுதூர் ஒன்றியம் |
Peasant's wing | அனைத்திந்திய கிசான் சபா |
கொள்கை | பொதுவுடைமை மார்க்சியம்-லெனினியம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி முதல் தூர-இடது |
பன்னாட்டு சார்பு | பொதுவுடமை மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பன்னாட்டு மாநாடு |
நிறங்கள் | சிவப்பு |
இ.தே.ஆ நிலை | தேசியக் கட்சி[1] |
கூட்டணி | இடது முன்னணி (மேற்கு வங்காளம்), இடது முன்னணி (திரிப்புரா), இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா), தமிழ்நாடு, பஞ்சாப் சனநாயகக் கூட்டமைப்பு |
தேசியக் கூட்டுநர் | சு. சுதாகர் ரெட்டி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., | 19 / 140 1 / 294 |
தேர்தல் சின்னம் | |
![]() |
ஆரம்ப கால வரலாறு
ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.
1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் [[அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் யூனியன் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.
ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை
அப்போது இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர்.
1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கான்பூர், மீரட் போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். இட்லரை [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள்.
காங்கிரசுடன் உறவு
கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய ஊடகங்கள்- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையத்தளம்
- "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). மூல முகவரியிலிருந்து 24 October 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 May 2013.
- https://cpim.org/party-programme